2020 என்ற வருடத்தை ஆவணங்களில் முழுதாக எழுத வேண்டும் என்ற எச்சரிக்கை செய்தி பரவி வருகிறது. ஏன் என்று அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
2020 ஆண்டை வரவேற்க உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இன்னி மூன்று நாட்களே புத்தாண்டாடுக்கு உள்ள நிலையில் புதிய குழப்பம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த புத்தாண்டு ஒரு அபூர்வ ஆண்டு ஆகும். முதல் இரண்டு இலக்கங்கள், அடுத்த இரண்டு இலக்கங்களாகவும் அமைந்துள்ளன. இதே போன்று இனி அமைவதற்கு இன்னும் 101 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
1-1-2020 என்ற புத்தாண்டு நாளை, 1-1-20 என்றுதான் நம்மில் பெரும்பாலானோர் குறிப்பிடுவோம். குறிப்பாக கையெழுத்திட்டு, தேதியை குறிப்பிடுகிறபோது இப்படி சுருக்கமாக குறிப்பிடுவதே நம் அனைவரின் பழக்கம் ஆகும்.
அந்த வகையில் இந்த புத்தாண்டில் ஒரு புதிய குழப்பம் இருக்கிறது. சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றையோ, முக்கிய ஆவணங்களையோ எழுதுகிறபோது 2020 என்ற ஆண்டை 20 என சுருக்கமாக எழுதக்கூடாது.
ஏனென்றால் 20-க்கு பின்னர் வசதிக்கேற்பவோ, தேவைக்கேற்பவோ (முறைகேடாக) 01 முதல் 19 வரை சேர்த்து விட முடியும், இதனால் ஆவண தேதி 20-ம் வருடம் என்பதை 2001-ம் வருடம் முதல் 2019-ம் வருடம் வரை மாற்றி விட முடியும். எனவே இந்த ஆண்டு முழுவதும் சிரமம் பாராமல் ஆண்டை 20 என சுருக்கமாக குறிப்பிடாமல் 2020 என முன்ஜாக்கிரதை உணர்வுடன் எழுத வேண்டும்.
இந்நிலையில் 20க்கு பக்கத்தில் வேண்டிய நம்பர்களை எழுதினால் ஆண்டே மாறிவிடும். அதனால் பல சிக்கல்கள், குழப்பங்கள் எழும். எனவே ஆண்டை எங்கு எழுதினாலும் 2020 என்று முழுமையாக எழுத வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் இந்த செய்தியை பலரும் சமூக வலைதளங்களில் அனுப்பி வருகின்றனர்.