New Year 2021: Stickers-ஐ பதிவிறக்கம் செய்து Whatsapp மூலம் அழகாய் அனுப்பலாம் புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு விழா என்பது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், அரவணைப்பையும் அன்பையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2020, 04:15 PM IST
  • புத்தாண்டு விழா என்பது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளிக்கும் விழாவாகும்.
  • மக்கள் பெரும்பாலும் பரிசுகளையும் வாழ்த்து அட்டைகளையும் கொடுத்து புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.
  • உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் மூலம் வாழ்த்துகளை பகிரலாம்.
New Year 2021: Stickers-ஐ பதிவிறக்கம் செய்து Whatsapp மூலம் அழகாய் அனுப்பலாம் புத்தாண்டு வாழ்த்து title=

புதுடெல்லி: 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதற்கும் ஒரு சவால் மிகுந்த ஆண்டாக இருந்துள்ளது. இந்த ஆண்டின் நிறைவையும் அடுத்த ஆண்டின் துவக்கத்தையும் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் கொண்டாட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆண்டு முழுவதும் கலக்கத்திலும் குழப்பத்திலும் கழிந்ததால், புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட மக்கள் ஆவலாக உள்ளனர்.

புத்தாண்டு விழா (New Year) என்பது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், அரவணைப்பையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதாகும். நம் உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து அவர்களுடன் நாம் வாழ்த்துகளையும் பரிசுகளையும் இந்த நாளில் பரிமாறிக்கொள்கிறோம். சந்திக்க முடியாதவர்களுடன் பல்வேறு தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் நம் பாசத்தை பகிர்ந்துகொள்கிறோம்.

மக்கள் பெரும்பாலும் பரிசுகளையும் வாழ்த்து அட்டைகளையும் கொடுத்து புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். ஆனால் வாழ்த்து அட்டைகள் இந்த காலத்தில் ஒரு அரிய விஷயமாக மாறிவிட்டன. தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் அவை வழக்கிலிருந்து போய்விட்டன என்றே கூறலாம்.

தொழில்நுட்பத்தைப் பற்றி பேசுகையில், இப்போது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துகளை அனுப்புவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. புதிய செயலிகள் (Apps) மற்றும் சமூக ஊடக தளங்களின் உதவியுடன் இவை வேகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாறிவிட்டன. நாம் நமது பெரும்பாலான நேரத்தை கழிக்கும் ஒரு அம்சமாக வாட்ஸ்அப் (Whatsapp) நம் வாழ்க்கையில் ஒன்றிணைந்து விட்டது. இந்த புத்தாண்டில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களுடன் (Whatsapp Stickers) வாழ்த்து தெரிவிப்பது ஒரு மிக நல்ல முறையாக இருக்கும்.

வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு சில அடிப்படை திருவிழா அடிப்படையிலான ஸ்டிக்கர்களை மட்டுமே வழங்குகிறது. இன்னும் பலவிதமான ஸ்டிக்கர்களைப் பெற பயனர்கள் தர்ட் பார்டி செயலிகளை Playstore-லிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

WhatsApp-ல் புத்தாண்டு 2021 ஸ்டிக்கர்களை எவ்வாறு அனுப்புவது என்று பார்க்கலாம்:

Step 1: முதலில் Playstore-க்கு செல்லுங்கள். சர்ச் பாரில், ‘New Year 2021 Stickers for WhatsApp’ என்று டைப் செய்யவும்.

Step 2: App-ஐப் பதிவிறக்கவும். இப்போது, ​​உங்களுக்கு புத்தாண்டு வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களின் பரந்த பட்டியல் வழங்கப்படும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Step 3: இப்போது, ​​இந்த ஸ்டிக்கர்களை உங்கள் வாட்ஸ்அப்பில் சேர்க்கும் பணியை செய்ய வேண்டும். ஸ்டிக்கர்கள் விண்டோவின் வலது மூலையில் உள்ள '+' பொத்தானைக் கிளிக் செய்யவும்.

Step 4: இந்த ஸ்டிக்கர்களை உங்கள் WhatsApp-ல் சேர்க்க விரும்புகிறீர்களா என்று கேட்டு திரையில் ஒரு பாப் தோன்றும். 'ADD' பொத்தானைக் கிளிக் செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஸ்டிக்கர்களும் இப்போது உங்கள் WhatsApp-ல் சேர்க்கப்படும்.

ALSO READ: புத்தாண்டு கொண்டாட்டம்: உங்கள் மாநிலத்தில் என்ன அனுமதி, என்ன அனுமதில்லை?

WhatsApp மூலம் புத்தாண்டு ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி:

Step 1: WhatsApp-ல் நீங்கள் பதவிறக்கம் செய்த ஸ்டிக்கர்கள் தோன்றுகின்றனவா என்பதை சரிபார்ப்பது முதலில் அவசியம்.

Step 2: நீங்கள் புத்தாண்டு ஸ்டிக்கர்களை அனுப்ப விரும்பும் நபருடனான சேட் விண்டோவைத் திறக்கவும்.

Step 3: டைபிங் பாரில் உள்ள ஸ்மைலி ஐகானைக் கிளிக் செய்யவும்.

Step 4: ஸ்டிக்கர்கள் பிரிவில் கிளிக் செய்யவும்.

Step 5: இனி, நீங்கள் புதிதாக சேர்த்த ஸ்டிக்கர்கள் அனைத்தையும் அனுப்பலாம்.

இந்த வகையில் கொரோனாவைரஸ் தொற்று காலத்திலும், நீங்கள் உங்கள் உறவுகளுடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியுடன் WhatsApp மூலம் உங்கள் புத்தாண்டு வாழ்த்துகளை (New Year wishes) பரிமாறிக்கொள்ளுங்கள்.

ALSO READ: ஜனவரி 1 முதல் SBI காசோலை செயல்முறையில் பெரிய மாற்றம்: விவரம் உள்ளே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News