பல தடைகளை தாண்டி உலகம் முழுவதும் வெளிவந்த ‘பத்மாவத்’ திரைப்படம் 4 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் ‘பத்மாவத்’ படம் திரைக்கு வந்தது. இப்படம் 4 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான `பத்மாவத்' படம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்தப் படம் கடந்த (ஜனவரி 25–ம் தேதி) வெளியாகிறது. ஆனால் ‘பத்மாவத்’ படத்துக்கு குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு அகற்றி கடந்த 18–ம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, இத்திரைப்படம் வெளியாவதை தொடர்ந்து கர்னி சேனா அமைப்பினர் பல இடங்களில் தொடர் போராட்டம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களும் நடத்தினர். இந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து எராளமா தியேட்டர் சூறையாடப்பட்டுள்ளது. எனினும், பல தடைகளை தாண்டி ‘பத்மாவத்’ திரைப்படம் எராளமான தியேட்டர்களில் வெளியானது.
இதை தொடர்ந்து, ‘பத்மாவத்’ திரைப்படம் கடந்த 4 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. முன்னோட்ட காட்சியில் ரூ5.07 கோடியும், முதல் நாளில் 19 கோடி ரூபாயும் வசூல், 2-வது நாளில் அதிகபட்சமாக 32 கோடி ரூபாய் வசூல், மொத்தமாக இதுவரை ரூ.114.58 கோடி ரூபாயை பத்மாவத் படம் வசூல் செய்துள்ளது.