எதிரிகளை அருகில் வைத்திருந்தாலும் நல்லதுதான்! எப்படி தெரியுமா?

Outcomes Of Keeping Your Enemies Closer : நம்மில் பலருக்கு, எதிரிகள் நமக்கு இருக்கின்றனரா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கும். இப்படி எதிரிகளை சம்பாதிப்பது நல்லதா கெட்டதா? இதோ அதற்கான பதில். 

Written by - Yuvashree | Last Updated : Dec 27, 2024, 04:29 PM IST
  • எதிரிகளை அருகில் வைத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
  • இதனால் உங்களுக்கு வெற்றிதான் கிடைக்கும்..
  • எப்படி தெரியுமா?
எதிரிகளை அருகில் வைத்திருந்தாலும் நல்லதுதான்! எப்படி தெரியுமா? title=

Outcomes Of Keeping Your Enemies Closer : பல சமயங்களில் நம்மை நாமே நல்லவர் என நினைத்துக்கொண்டிருப்போம். நமக்கு அனைவர் மீதும் பிடித்தம் இருப்பது போல, நமக்கும் அனைவர் மீதும் பிடித்தம் இருக்கும் எனும் நினைப்பில் இருப்போம். ஆனால், நமக்கும் எதிரிகள் இருக்கின்றனர் என்பதை ஒரு நாள் உணர்த்தும்.

ஆங்கிலத்தில் “உன் எதிரிகளை அருகிலேயே வைத்திரு” என்ற ஒரு பழமொழி உண்டு. எதிரிகளை நம் பக்கத்திலேயே வைத்திருக்க சில காரணங்களும் உண்டு. இதனால் நல்லதும் ஏற்படும், கெட்டதும் ஏற்படும். அவை குறித்து இங்கு பார்ப்போம்.

நல்ல காரணங்கள்: 

1.நீங்கள் உங்களை விட்டுக்கொடுப்பதில்லை: 

நாம் சில எதிரிகளை சம்பாதிக்கிறோம் என்றால், ஏதோ ஒரு இடத்தில் நமக்கு எதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ அதை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறோம். எந்த இடத்திலும் உங்களின் கொள்கைகளையும் மதிப்புகளையும் விட்டுக்கொடுக்காமல் உள்ளீர்கள் என்று அர்த்தம். அதில் உங்களுடன் ஒத்துழைக்காதவர்கள் உங்களுக்கு எதிரிகளாக மாறியிருக்கலாம்.

2.நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை காட்டுகிறது: 

உங்களது செயல்பாடுகள் அல்லது வெற்றிகள் பலரது கவனத்தை ஈர்க்கின்றது என்றால், கண்டிப்பாக அருகில் உள்ள சிலர் எதிரிகளாக மாறிவிடுவர். இது, நீங்கள் ஏறடுத்திய தாக்கத்தின் விளைவாக இருக்கிறது. இதைப்பார்த்து பயப்படும் அல்லது நமக்கு ஆபத்து ஏற்படுமோ என நினைக்கும் சிலர்தான் உங்களுக்கு எதிரிகளாக மாறிவிடுகின்றனர்.

3.உங்கள் வளர்ச்சிக்கு உதவும்: 

உங்களை ஒருவர் எதிர்க்கிறார் என்றால், அந்த எதிர்ப்பு உங்கள் வளர்ச்சிக்கு உதவும் கருவியாகவும் இருக்கும். அவர்கள் கொடுக்கும் எதிர்ப்பால் நீங்கள் விடாமுயற்சியையும், மன உறுதியையும் கற்றுக்கொள்வீர்கள். அதே போல, எந்த சூழலையும் தாண்டி எப்படி வரலாம் என்பதையும் உங்கள் எதிரிகளே உங்களுக்கு சொல்லிக்கொடுப்பர்.

4.உண்மையான நண்பர்களை காண்பிக்கும்: 

யாரேனும் நீங்கள் கூறும் கருத்தை அல்லது உங்களை எதிர்க்கும் போது, உங்களுக்கு கடினமான காலம் ஏற்படும். இது, உங்களுக்கு யார் உண்மையாகவே ஆதரவாக இருக்கிறார்கள், யாரை நீங்கள் நம்பலாம் என்பதை காண்பிக்கும்.

5.சுய சிந்தனையை அதிகரிக்கும்: 

உங்களை ஒருவர் எதிர்க்கும் போது, அவர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்பதை யோசிப்பீர்கள். இது, நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் வரும் எதிர்ப்பா? உங்கள் மீது ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும் எதிரிகள் உங்களை சுற்றி இது உதவும். 

மேலும் படிக்க | அலுவலக அரசியலை கையாள்வது எப்படி? ஈசியான 5 வழிகள்!!

மோசமான காரணங்கள்:

1.உங்கள் மனதை கெடுக்கலாம்:

எப்போதும் எதிரிகளை அருகிலேயே வைத்திருப்பது, உங்களை மனதளவில் பாதிக்கலாம். நீங்கள் உங்களையும், உங்களை சேர்ந்தவர்களையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் ஏற்படும். இது, உங்களுக்கு அதிகப்படியான நெகடிவ் எண்ணங்களை வர வழைக்கும். இதனால், உணர்ச்சி ரீதியாக நீங்கள் சோர்வடையலாம், மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.

2.தடைகள் அதிகரிக்கலாம்: 

எதிரிகள் உங்கள் அருகிலேயே இருப்பதால், உங்களை நேரடியாக அட்டாக் செய்ய முடியவில்லை என்றாலும் மறைமுகமாக அட்டாக் செய்வர். உங்களின் சமூக அந்தஸ்தை கெடுக்க நினைப்பர். அவப்பெயர் ஏற்படுத்த நினைப்பர். உங்களுக்கு வரும் வாய்ப்புகளை தட்டிப்பறிப்பர்.

மேற்கூறியது போல, எதிரிகளை அருகில் வைத்துக்கொள்வதால் நல்லதும் ஏற்படுகிறது, கெட்டதும் ஏற்படுகிறது. ஆனால், அவற்றை சமாளிக்க கற்றுக்கொண்டால், நீங்கள்தான் கில்லி. 

மேலும் படிக்க | உங்களின் ரகசிய எதிரிகளை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ மாதிரி நடந்து கொள்வார்கள்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News