சென்னை: ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது தொன்றுதொட்டு வரும் பழமொழி. ஆனால், ஆலயமோ, தேவாலயமோ வெறும் வழிப்பாட்டிற்குரிய இடங்களா என்ற கேள்விகள் எழுகின்றன
தேவாலயத்திற்கு சென்று, செய்த தவறுகளுக்கு பாவமன்னிப்பு கேட்பார்கள் என கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால், அங்கேயே காம கொடூரர்கள் பணியாற்றினால் என்ன செய்வது?
கடந்த 17ஆம் தேதியன்று சர்ச்சில் (Church) ஜெபம் செய்த பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை பற்றிய செய்திகள் வெளியாகி அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்த போலீசார் உடனடியாக மதபோதகரை (pastor) கைது செய்தனர். ஆவடி அருகே வசிப்பவர் ஸ்காட் டேவிட் என்ற 53 வயது மத போதகர். அவர் குடியிருக்கும் பகுதியில் உள்ள சர்ச்சில் ஜெபங்களை நடத்துவார், மதபோதனைகளையும் செய்வார்.
Also Read | Lockdown அச்சத்தில் தமிழகத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
குடும்ப பிரச்னைகளை தீர்ப்பதற்காக வீடுகளுக்கு சென்று ஜெபம் செய்வார். ஆரிக்கமேடு (Arikamedu) பகுதியில் வசிக்கும் ஏஞ்சலின் என்ற 42 வயது பெண்ணின் (woman) வீட்டிற்கு சென்று அங்கும் ஜெபம் செய்துள்ளார்.
அதையடுத்து ஏஞ்சலின் சர்ச்சிற்கு வந்து ஜெபம் செய்துள்ளார். 17ம் தேதி சர்ச்சில் ஏஞ்சலின் ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது மதபோதகர் ஸ்காட் டேவிட், ஏஞ்சலினை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த ஏஞ்சலின் அங்கிருந்து தப்பியோடினார். உடனடியாக, ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மதபோதகரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
Also Read | சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR