50 வயதிலும் விஜய் Fit-ஆக இருக்க ‘இது’தான் காரணம்!! சீக்ரெட்டை தெரிஞ்சிக்கோங்க..

The GOAT Actor Vijay Fitness Routine : நடிகர் விஜய்க்கு, தற்போது 50 வயதாகிறது. இந்த வயதிலும் அவர் ஃபிட்டாக இருக்க காரணம் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Sep 4, 2024, 02:15 PM IST
  • விஜய்யின் ஃபிட்னஸ் டிப்ஸ்!
  • 50 வயதிலும் இளைஞரின் தோற்றம்..
  • சீக்ரெட்ன் என்ன?
50 வயதிலும் விஜய் Fit-ஆக இருக்க ‘இது’தான் காரணம்!! சீக்ரெட்டை தெரிஞ்சிக்கோங்க.. title=

The GOAT Actor Vijay Fitness Routine : தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். 90கள் மற்றும் 2000 காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். காரணம், அவர்கள் சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்த நாயகனாக இருக்கிறார் விஜய். இந்த ஆண்டுதான் அவருக்கு 50 ஆவது பிறந்தநாள் கடந்த சென்றது. ஆனால், தோற்றத்தில் எப்போதும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். இதற்குப் பின்னால் இருக்கும் சீக்ரெட் என்ன? 

என்றும் இளமை-விஜய்:

தனது 20களில் இருந்தது போல இப்போது இல்லை என்றாலும் இன்னும் அதே துருதுறுப்புடனும் குறும்புடனும் இளமை மாறா துள்ளலுடனும் இருக்கிறார் விஜய். பொதுவாக ஒருவருக்கு 40 வயதில் கடந்தாலே தோள்கள் சுருங்குதல், தொப்பை விழுதல், தசைகள் தளர்த்தல் ஆகியவை நடக்கும். ஆனால் நடிகர் விஜய் இன்னும் தனது கட்டு மஸ்தான உடம்பை அப்படியே மெயின்டைன் செய்து வருகிறார். சமீபத்தில் கோட் படத்தின் டிரைலர் வெளியானது. இதில் டி-ஏஜிங் செய்யப்பட்டு இளமை தோற்றத்தில் இருக்கும் விஜயை விமர்சித்த ரசிகர்கள், நடுத்தர வயது கதாபாத்திரத்தில் வரும் விஜய் மாஸ்ஸாக இருப்பதாக கூறினர். இந்த அளவிற்கு விஜய் தன் உடலை எப்படி பராமரித்து கொள்கிறார்? 

விஜயின் உயரமும் எடையும்…

நடிகர் விஜய் தோராயமாக 5 அடி-10 முதல் 11 அங்குலம் வரை இருக்கிறார். உடல் எடையை 73 முதல் 25 கிலோ வரை இருக்கும் அளவிற்கு பார்த்துக் கொள்கிறார். 

டயட்: 

ஒருவர் தன் உடலை பராமரித்துக் கொள்ள உடற்பயிற்சி, டயட் என அனைத்தும் தேவைப்பட்டாலும், முதலில் தேவைப்படுவது ஒழுக்கம். விஜய் சுய ஒழுக்கத்துடன் தனது டயட்டை தினம் தோறும் பின் தொடர்வார் என கூறப்படுகிறது. கார்போஹைட்ரேட்சுக்காக தினமும் அரிசி சாதம் மற்றும் பிரட்டை எடுத்துக் கொள்கிறார். 

விஜய்க்கு காய்கறி மற்றும் பழங்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே, அவற்றையும் தனது டயட்டில் மறக்காமல் சேர்த்துக் கொள்கிறார். புரதச்சத்திற்காக சிக்கன் மற்றும் முட்டையை தனது டயட்டில் சேர்த்துக் கொள்கிறார். 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இரவில் சீக்கிரமாக டின்னர் சாப்பிட்டு விடுவது நல்லது என்று பலர் கூறுவர். இதை பின்பற்றும் விதியை சீக்கிரமாகவே பிரட் அல்லது சாலட்டை சிம்பிளான டின்னராக எடுத்துக் கொள்வாராம். 

மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..

உடற்பயிற்சிகள்: 

ஒரு நாளும், தனக்கான உடற்பயிற்சிகளை செய்ய தவறாதவர் விஜய். தினமும் ஜிம்மில் 15 நிமிடத்திற்கு ஸ்பிரின்ட்ஸ் அல்லது கார்டியோ உடற்பயிற்சிகள் செய்வது இவரது வழக்கம். ஷூட்டிங்கில் இருக்கும் சமயங்களில் கார்டியோ செய்ய இயலாத போது, நெடுந்தூரம் நடந்து சென்று தனது கார்டியோவை முடித்துக் கொள்வாராம். 

வெயிட் ட்ரெயினிங்: 

விஜய்க்கு அதிக எடையுடன் இருப்பதும், ஜிம் பாடி போல அதிக தசையுடன் இருக்கும் உடல் பிடிக்காதாம். எனவே மிகவும் ஹெவியாக வெயிட் லிப்டிங் செய்யாமல், கொஞ்சம் மிதமான எடையுடன் கூடிய வெயிட் லிப்டிங் தான் செய்வார் என கூறப்படுகிறது. அதேபோல, குதிக்கும் உடற்பயிற்சிகளான ஜம்பிங் ஜாக்ஸ் போன்றவை இவரது ஃப்பேவரட். பயோமெட்ரிக்ஸ் எனப்படும் சண்டை பயிற்சிகளையும் இவர் மேற்கொள்கிறார். இது அவரது உடலை மிதமாக வைத்துக் கொள்ளவும் நடனமாடுகையில் ஈசியாக அதற்கு ஏற்ற மாதிரி வளையவும். 

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க சினேகா செய்யும் விஷயம்! அட, அசத்தலா இருக்கே..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News