Positive Signs This Universe Shows You Are A Good Person :எதுவும் செய்யாமல் அப்படியே விட்டத்தை பார்க்க அமர்ந்திருக்கும் போது, “உண்மையாகவே நான் நல்லவர் தானா? இல்லை நடிக்கிறேனா?” என்ற சந்தேகம் நமக்குள் எழும். இதை தீர்த்துக்கொள்ள இந்த பிரபஞ்சமே உங்களுக்கு சில அறிகுறிகளை காண்பிக்கும். இது குறித்து விளாவாரியாக இங்கு பார்ப்போம்.
பாசிட்டிவான உணர்வு:
நீங்கள் நல்லவராக இருந்தால் உங்களை சுற்றி இருப்பவர்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களாகவும், பாசிட்டிவான எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பர். உங்களிடம் வந்து பேசுபவர்கள், யார் என்றே தெரியாதவர்களாக இருந்தாலும் கனிவாக நடந்து கொள்வர். இது உங்களிடம் இருந்து அவர்கள் பெற்ற உணர்வாகவும் அதன் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்.
நன்றி உணர்வு:
உங்களுடன் இருப்பவர்களிடமிருந்து எப்போதும் நன்றி அல்லது பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் செய்த உதவி சிறியதாகவும் இருக்கலாம் பெரியதாகவும் இருக்கலாம், ஆனால் அதற்கு உங்களுக்கு கிடைக்கும் நன்றிகள் அளவற்றதாக இருக்கும்.
வளர்வதற்கான வாய்ப்புகள்:
நீங்கள் வாய்ப்பை தேடி செல்லவில்லை என்றாலும், வாய்ப்புகளாக உங்கள் வாயிற் கதவை வந்து தட்டும். நீங்கள் கற்றுக் கொள்வதற்கும், உங்களை வளர்த்துக் கொள்வதற்கும், பிறருக்கு உதவி செய்வதற்கும் அந்த வாய்ப்புகள் உதவும். இது, சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை காண்பிக்கும் அறிகுறிகள் ஆகும்.
அமைதியான மனநிலை:
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இந்த முடிவை எடுத்தாலும் அதில் உங்களுக்கு அமைதியை கிடைக்கும். வாழ்க்கை உங்கள் மீது எந்த சவாலை தூக்கி இருந்தாலும், அதை ஒருவித சாந்தமான மனநிலையுடன் சமாளிப்பது உங்கள் திறமையாக இருக்கும்.
எதிர்பாராத நல்ல விஷயங்கள்:
நீங்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத நபர் உங்களிடம் வந்து கனிவாக பேசுவார், யார் என்று தெரியாத ஒருவர் உதவி செய்வார். இப்படி உங்கள் நல்ல மனத்தை பாராட்டும் வகையில் இந்த யுனிவர்ஸ் உங்கள் வழியில் நல்ல விஷயங்களை மட்டும் நட்டு வைத்திருக்கும்.
தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுதல்:
நீங்கள் என்ன தவறு செய்திருந்தாலும் அதற்கான முழு பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்கள். யார் மீதும் பழி சுமத்தாமல், நீங்கள் செய்த தவறை நீங்களே சரி செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இது உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ள, உங்களுக்கே தெரியாமல் செய்யும் விஷயமாகும்.
வாழ்வின் மதிப்புகளும் நடவடிக்கைகளும்:
நீங்கள் தினமும் செய்யும் விஷயங்கள் உங்கள் வாழ்க்கை குறித்து நீங்கள் வைத்திருக்கும் மதிப்புகளுடன் ஒத்துப்போகும். எப்போதும் இல்லை என்றாலும், அடிக்கடி பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பீர்கள்.
மேலும் படிக்க | ராஷ்மிகா மந்தனா பரிந்துரைக்கும் 6 சிந்தனையை தூண்டும் புத்தகங்கள்!!
ஒத்துப்போகும் அசைவுகள்:
நீங்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் அல்லது, சாதிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், அதற்கு ஏற்றவாறான ஒத்துழைப்புகளை இந்த உலகம் உங்களுக்கு காண்பித்துக்கொண்டே இருக்கும். உங்களுடன் இருப்பவர்களில் இருந்து, யாரென்றே தெரியாதவர்கள் வரை பலர் உங்களுக்கு எதையும் எதிர்பார்ப்பார்க்காமல் உதவி செய்ய முன் வருவர்.
புரிந்துணர்வு:
உங்களை நீங்கள் ஆழமாக புரிந்து கொள்வதோடு, பிறரின் மனதையும் புரிந்து அதற்கு ஏற்றார் போல நடந்து கொள்வீர்கள். யாருக்கு என்ன தேவை என்றாலும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். இது, உங்களுக்குள் இருக்கும் நல்ல மனதை காண்பிக்கிறது.
மன தைரியம்:
உங்களை சுற்றி அனைத்தும் நெகடிவாக சென்று கொண்டிருந்தாளும், நீங்கள் நினைத்த எதையும் செய்ய முடியவில்லை என்றாலும் கூட, உங்கள் மனதுக்குள் உங்களுக்கே தெரியாத, இனம் புரியாத மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். அதே போல, நீங்கள் இருக்கும் சூழல் எவ்வளவு மோசமாக மாறினாலும் அதை எதிர்தது மேலே வந்து விட முடியும் என்ற தைரியமும் உங்களுக்குள் இருக்கும்.
மேலும் படிக்க | 20 வயதில் ‘இதை’ செய்தால் 60 கஷ்டமே தெரியாது! என்ன செய்யனும் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ