ஜோதிட சாஸ்திரத்தின் படி, பொதுவாக, கிரகங்கள் அஸ்தமிக்கும் போது, அது மனித வாழ்க்கையில் நேரடி விளைவுகளை ஏற்படுத்துகின்றது. தற்போது, கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் கிரகம் அஸ்தம நிலையில் உள்ளது.
புதன், மார்ச் 14, 2022 திங்கட்கிழமை காலை 05:53 மணிக்குப் அஸ்தமமானார். ஏப்ரல் 12, 2022 செவ்வாய்கிழமை மாலை 07:32 மணிக்கு அவர் மீண்டும் உதயமாவார். புதன் மொத்தம் 30 நாட்கள் அஸ்தம நிலையில் இருப்பார். புதனின் இந்த அஸ்தம காலத்தில் எந்த ராசிக்காரர்கள் எதிர்மறையான விளைவுகளை சந்திப்பார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மேஷம்:
புதன் மேஷ ராசியின் 11ம் வீட்டில் அஸ்தமமாகியுள்ளார். இது வருமானம் மற்றும் லாபத்திற்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால், வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வருமான வழிகளில் குறைவு ஏற்படலாம்.
வர்த்தகர்களின் சில முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவடையும் நிலையில் வந்து பின்னர் தடைகளை சந்திக்கலாம். இந்த காலகட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதில் அதிக கவனம் தேவை.
ரிஷபம்:
புதனின் அஸ்தமனம் உங்கள் ராசி-க்கு பல வித பிரச்சனைகளை ஏற்படுத்தும். உங்கள் பணி மற்றும் தொழிலுக்கான ஸ்தானத்தில் புதன் அஸ்தமமாகியுள்ளது. இதனால் உத்தியோகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பண வரவும் வெற்றியும் ஏற்படும்..!!
வேலை வாய்ப்புகள் இழக்கப்படலாம். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். மூத்த அதிகாரிகளுடனான உறவுகள் மோசமடையக்கூடும். வேலையில் உங்கள் கடின உழைப்பின் பலன் கிடைக்காமல் போகலாம்.
மிதுனம்:
புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அஸ்தமமாகியுள்ளார். ஒன்பதாம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கான ஸ்தானமாகும்.
புதனின் அஸ்தமனத்தால், ஏப்ரல் 12 வரை மிதுன ராசிக்கார்ரகளுக்கு அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். நீங்கள் திட்டமிட்டிருந்த பணிகள் நடக்காமல் போகலாம். புதனின் அஸ்தமன காலத்தின் போது நீங்கள் ஆவணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வணிகத்தில் சில முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவடையும் நிலையில் வந்து பின்னர் தடைகளை சந்திக்கலாம். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்திலும் வீட்டிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR