மழை காலம் ஆரம்பிச்சாச்சு..குளிருக்கு சூடா ‘இந்த’ ஹெல்தி சூப்களை குடியுங்கள்!

நம்ம ஊரில் மழைக்காலம் ஆரம்பித்ததால் குளிர் வாட்டி வதைக்கிறது. இதை சமாளிக்க சில சூப்களை வீட்டில் செய்து பார்க்கலாம்.   

Written by - Yuvashree | Last Updated : Nov 15, 2023, 08:31 PM IST
  • மழை காலம் வந்துவிட்டாலே குளிரும் சேர்ந்து வந்துவிடும்.
  • இதை சமாளிக்க சில சுவையான சூப்கள்
  • இவற்றை சாப்பிடுவதால் உடலில் நோயெதிர்ப்பு சக்திகளும் அதிகரிக்கும்.
மழை காலம் ஆரம்பிச்சாச்சு..குளிருக்கு சூடா ‘இந்த’ ஹெல்தி சூப்களை குடியுங்கள்! title=

நம் ஊரில் மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. குளிர்காலம் அதன் உறைபனி கரங்களை நம்மைச் சுற்றிக் கொண்டிருப்பதால், உடலை ஹெல்தியாக பார்த்துக்கொள்ள நமக்கு பல வழிகள் இருக்கின்றன. அதே போல, ஜில்லென்ற காற்றை சமாளிக்க, உடலில் எந்த நோய் நொடியும் அண்டாமல் பார்த்துக்கொள்ள சில ஹெல்தியான சூப் வகைகள் இருக்கின்றன. இதை, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகவும் எடுத்து கொள்ளலாம். குளிர்காலத்தில் உடலை சூடேற்ற உதவும் எளிதான மற்றும் சுவையான மற்றும் சத்தான சூப்களின் பட்டியல் இங்கே.

1.பருப்பு சூப்:

தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் நார்ச்சத்து நிரம்பிய பருப்பு சூப் உடலுக்கு சத்து தரும் உணவு வகைகளுள் ஒன்று. இது, குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவு மட்டுமல்ல அன்றாடம் தேவைப்படும் ஊட்டச்சத்து சக்தியையும் இதன் மூலம் நாம் எடுத்துக்கொள்ளலாம். இந்த சூப் செய்கையில், காய்கறிகள் மற்றும் நறுமண மசாலாக்களை சேர்த்து கொள்ளலாம். இதனுடன் நறுமணமான மசாலாக்களை சேர்த்தால் சுவையான சூப் தயார். 

2.கோழி மற்றும் காய்கறி குழம்பு:

காய்கறி மற்றும் கோழிக்கறி ஆகிய இரண்டுமே உங்கள் உடலுக்கு வலு கொடுக்க உதவும். இது, உங்களை உட்புறம் இருந்து மட்டுமல்ல, வெளிப்புற தோற்றத்தையும் அழகாக்க உதவும். கோழி மற்றும் காய்கறி சூப்/குழம்பில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் அதிகமாக உள்ளன. உடலுக்கும், நமது அசைவுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் எலும்புகளுக்கும் இந்த சூப் மிகவும் உதவும். இந்த குளிர்காலத்தை சமாளிக்க ஹெல்தியான கோ மற்றும் காய்கறி சூப்/குழம்பை எடுத்துக்கொள்ளுங்கள். 

3.கிரீமியான தக்காளி சூப்:

ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று, தக்காளி. இதை தினசரி உணவில் எடுத்துக்கொள்வதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள முடியும். தக்காளி சூப்பில் துளசி பொடியை கலந்தும் குடிக்கலாம். இது, சத்து நிறைந்த ஹெல்தியான சூப்பாக இருக்கும். தக்காளியுடன் இன்னும் சில காய்கறிகளை இந்த சூப்பில் சேர்ப்பதால் வயிற்றில் ஏற்படும் அழற்சியும் சரியாகும். 

மேலும் படிக்க | Weight Loss: கேரட் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? உண்மை இதோ!

4.Quinoa சூப்:

ஊட்டச்சத்து நிரம்பிய சூப்பிற்கு, குயினோவா மற்றும் காய்கறி சூப்பை ட்ரை செய்து பாருங்கள். குயினோவா உடலுக்கு தேவையான முழுமையான புரதங்களை வழங்குகிறது. அதே சமயம் பல்வேறு காய்கறிகளை இதில் சேர்ப்பதால் ஊட்டச்சத்துமிக்க குளிர்கால ஸ்நாக்ஸ் ஆகவும் இந்த சூப் இருக்கிறது. இதில், ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் கலந்துள்ளதால் உடலில் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும். 

5.காளான் பார்லி சூப்:

காளான் மற்றும் பார்லி ஆகிய இரண்டு உணவு பொருட்களுமே உடலுக்கு வலு கொடுக்கும் சத்துக்கள் நிறைந்தவை ஆகும். இரண்டிலும் ஃபைபர் சத்துக்கள் நிறைந்துள்ளதால் வயிற்று பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும். மேலும், குளிர் காலத்தில் சுவையான மற்றும் சூடான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள இதை தேர்ந்தெடுக்கலாம். 

மேலும் படிக்க | Hairfall Remedies: வலுவான மற்றும் நீளமான முடிக்கு 5 இயற்கை வீட்டு வைத்தியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News