தீபாவளி கொண்டாட்டத்தின் வகைகள்! ஒரு சிறப்பு பார்வை!

தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதியில் தீபாவளி கொண்டாட்டம் வித்யாசமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பகுதியில் தீபாவளி கொண்டாட்டம் எவ்வாறு அணுகப்பட்டு வருகிறது என்று பார்ப்போம்!

Last Updated : Nov 6, 2018, 09:00 AM IST
தீபாவளி கொண்டாட்டத்தின் வகைகள்! ஒரு சிறப்பு பார்வை! title=

தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதியில் தீபாவளி கொண்டாட்டம் வித்யாசமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பகுதியில் தீபாவளி கொண்டாட்டம் எவ்வாறு அணுகப்பட்டு வருகிறது என்று பார்ப்போம்!

சீக்கியர்களின் தீபாவளி:- 

1577-ல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி:-

மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

புத்த மதத்தினரின் தீபாவளி:-

மாமன்னர் அசோகர் புத்த மதத்துக்கு மாறிய நாள், புத்த மதத்தினரால் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளை ‘அசோக விஜயதசமி’ என்று அழைப்பர். 

வட இந்தியா தீபாவளி:-

வட இந்தியாவில் சில இடங்களில் தீபாவளியன்று நரகாசுரனுடைய உருவங்களைக் கொளுத்தி கிருஷ்ண பகவானுடைய வெற்றியைக் கொண்டாடுகின்றனர்.

அசோக தீபாவளி:-

சாம்ராட் அசோகர் தன்னுடைய திக் விஜய யாத்திரையை நிறைவு செய்து விட்டு, தனது நாட்டிற்கு திரும்பிய நாள் தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டது. அந்த நாளே தீபாவளி.

மராட்டிய தீபாவளி:-

மராட்டிய மன்னனான வீரச்செயல்களில் சிறப்பு மிக்க சத்ரபதி சிவாஜி, தன்னுடைய விரோதிகளின் கோட்டையை தாக்கி கைப்பற்றிய நாள் தீபாவளி. மராட்டிய பகுதிகளில் இது “தன திரயோதசி”, “தண்டெராஸ்”  என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. 

அயோத்தி தீபாவளி:-

ராவண சம்ஹாரம் முடிந்து, ராமன் தன் மனைவி சீதாதேவியுடன் அயோத்தி திரும்பினார். 14 ஆண்டுகளாக ராமரை தரிசிக்க அயோத்தி நகரவாசிகள், அந்த இரவு நேரத்தில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தார்கள். அந்த நாளே தீபாவளி.

Trending News