Google Pay, PhonePe பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! UPI-ல் நடக்கும் மோசடி!

ஆப்ஸ்களை பயன்படுத்தி டிரான்ஸாக்ஷன் செய்வது எளிமையானதாக இருந்தாலும், அதில் சில மோசடிகள் நடக்கின்றன.  

Written by - RK Spark | Last Updated : Jun 13, 2022, 05:20 PM IST
  • கூகுள் பே, பேடியம், போன் பே போன்றவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
  • பணத்தை எளிதாக அனுப்ப இவை பயன்படுகின்றன.
  • ஆன்லைனில் பணம் அனுப்புவதில் சில ஆபத்தும் இருக்கின்றன.
Google Pay, PhonePe பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! UPI-ல் நடக்கும் மோசடி! title=

தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த நவநாகரீக உலகில் எல்லா செயல்முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளது, நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் பற்பல மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  முன்னரெல்லாம் ஒரு பொருளை வாங்க பணத்தை எண்ணி எடுத்துக்கொண்டு கடைக்கு சென்று வாங்குவோம், அதில் கடைக்காரர் சரியாக பாக்கி தொகையை கொடுத்திருக்கிறார் என்று சார்பார்ப்பதிலேயே பலருக்கும் பல மணி நேரம் செலவாகும்.  ஆனால் இப்போது இருந்த இடத்தில் இருந்துகொண்டே நாம் விருப்பப்படும் பொருட்களை ஒரே தட்டலில் வீட்டிற்கு கொண்டு வர முடியும், அதிலும் பணத்தை எண்ணி எண்ணி கொடுக்காமல் டிஜிட்டல் முறையில் டிரான்ஸாக்ஷன் செய்து கொள்ளும் சவுகரியமான நிலை ஏற்பட்டு விட்டது.

மேலும் படிக்க | ரூ.149 திட்டத்தில் 1 GB கொடுக்கும் ஜியோ - ஏர்டெல் கலக்கம்

கூகுள் பே, பேடியம், போன் பே போன்ற பல ஆப்ஸ்கள் பணத்தை பரிமாற்றிக்கொள்ள உதவுகின்றன, இதனால் நீங்கள் வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருந்து பணம் போடவோ, எடுக்கவோ வேண்டியதில்லை.  இவற்றின் மூலம் நாம் ஒரே இடத்தில் இருந்துகொண்டே மொபைலுக்கு ரீசார்ஜ், மளிகை பில், மின்சார கட்டணம் போன்ற ஏராளமான கட்டணங்களை எளிதான முறையில் செலுத்தி கொண்டு இருக்கிறோம்.  இருப்பினும் இவை எவ்வளவு தான் சவுகரியமான செயல்முறையாக இருந்தாலும், இதன் மறுபுறம் ஆபத்தும் நிறைந்து இருக்கிறது.  இப்போது இந்த சேவைகளின் மூலம் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து நீங்கள் எப்படி தப்பிக்கலாம் என்பது குறித்து இங்கே காண்போம்.

உங்களது ஏடிஎம் கார்டின் ரகசிய பின் நம்பரை எப்படி மற்றவருடன் பகிர்ந்துகொள்ள மாட்டீர்களோ அதேபோன்று உங்களது யூபிஐ பின் நம்பரையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.  அனைத்து வங்கிகளும் சரி, அரசும் சரி தொலைபேசி வழியாக மக்களிடம் பின் நம்பர் குறித்த எவ்வித தகவல்களையும் நாங்கள் கேட்பதில்லை, அப்படி அழைப்பு வந்தால் நீங்கள் விவரங்களை சொல்ல வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.  அதனால் நீங்கள் ஒருபோதும் யாரிடமும் இந்த விவரங்களை கூறிவிடாதீர்கள், அப்படி ஏதேனும் மோசடி அழைப்புகள் வந்தால் நீங்கள் வங்கிகளிலோ அல்லது போலீசிலோ புகார் அளிக்கலாம்.  யூபிஐ சேவை பயன்படுத்துபவர்கள் மொபைலில் பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் உங்களுக்கு நெருக்கமானவர்களை தவிர அறிமுகம் இல்லாதவர்களிடம் உங்களது மொபைலை கொடுக்காதீர்கள்.

அடிக்கடி உங்களது யூபிஐ பின் நம்பரை மாற்றிக்கொள்வது மோசடியிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிவகுக்கிறது.  மாதம் ஒரு முறை மாற்றுவது உங்களுக்கு முடியாத பட்சத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது 8 மாதங்களுக்கு ஒரு முறை என மாற்றிக்கொள்ளலாம்.  மேலும் உங்களுக்கு பரிசு, கேஷ்பேக் மற்றும் ஏதேனும் ரிவார்டு கிடைத்திருப்பதாக செய்திகள் வந்தால் உடனே அந்த இணைப்புகளுக்கு செல்லாதீர்கள், அது உங்களது கணக்கிலிருந்து பணத்தை பறிக்கும் ஒரு மோசடி முறையாக கூட இருக்கலாம்.

மேலும் படிக்க | உங்கள் ஆதாரில் வேறொருவர் சிம்கார்டு வாங்கியிருந்தால் கண்டுபிடிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News