தயிருக்கு பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை அறிந்து நமது முன்னோர்கள், அதனை அதிகம் அவர்களது உணவில் பயன்படுத்தினர்.
அதுவும் கொரோனா பரவல் அதிகம் உள்ள இந்த காலத்தில், தயிர் உண்மையில் ஒரு வரப்பிரசாதம் எனக்கூறலாம். ஏனென்றல், தயிர் நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் வலுப்படுத்துகிறது. இது தவிர வேறு பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
தயிர் சிறந்த புரோபயாடோயிக் உணவுகளில் ஒன்றாகும், இதில் நம் உடலுக்கு நன்மை பயக்கும் பல நுண்ணுயிரிகள் உள்ளன. புரோபயாடிக் உணவுகள், தொற்று நோயை எதிர்த்து போராடும், ரத்தத்தின் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இதனால் பல தொற்றுநோய்கள் வருவதௌ தடுக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுகிறது.
ALSO READ | ரொம்ம்ப சோர்வா இருக்கீங்களா? இதை மொதல்ல செக் பண்ணுங்க…!!!
2. இது உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது
பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்த, தயிர் உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. இது கீல்வாதத்தைத் தடுக்க உதவுகிறது. வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் வேண்டும் என்றால், உணவில் தினமும் தயிரை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
3. மிருதுவான சருமம் மற்றும் மின்னும் தலைமுடியைப் பெற வீட்டு வைத்தியமாகப் பயன்படுத்தலாம்
தயிர் சருமத்திற்கும் தலைமுடிக்கும் அழகூட்ட மருந்து பொருளை போல் பயன்படுத்தலாம். தயிர், எலுமிச்சை மற்றும் கடலை மாவு கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தி கழுவ வேண்டும். தயிர் ப்ளீச்சாக செயல்படுகிறது. ஆரோக்கியமான, பளபளப்பான முடியைப் பெற இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்.
4. செரிமானத்தை மேம்படுத்துகிறது
தயிரில் உள்ள புரோபயாடிக் தன்மை செரிமான உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகின்றன. தயிர் ஜீரணிக்க எளிதானது. பால் தயிராக உறையும் போது அதில் உள்ள லாக்டோஸ் உடைக்கப்படுவதால் லாக்டோஸ் உண்டால் அலர்ஜி அல்லது பாதிப்பு ஏற்படுபவர்களும் தயிரை உட்கொள்ளலாம்.
5. இதயத்திற்கு நல்லது
தினமும் தயிர் சாப்பிடுவது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும், இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இதனால், இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
6. எடையை குறைக்க உதவுகிறது
கார்டிசோல் எனப்படும் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு குவிந்துள்ளது. தயிர் கால்சியம் நிறைந்துள்ளது, இது கார்டிசோல் உற்பத்தியை குறைப்பதால், எடையை குறைக்க உதவுகிறது. தயிர் உட்கொள்வது உங்களை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். கலோரிகளின் அளவைக் குறைப்பதன் மூலம் வயிற்றை குறைக்கவும் இது உதவுகிறது.
7. பொடுகு நீக்குகிறது
தலை முடியின் பொதுவான பிரச்சனையான பொடுகு பிரச்சனைக்கு தயிர் சிறந்த வீட்டு வைத்தியம். தயிரின் ஆண்டி ஃபங்கல் தன்மை பொடுகு நீக்குவதற்கான சிறந்த தீர்வாக அமைகிறது. நீங்கள் செய்ய வேண்டியது தயிர் மற்றும் மருதாணி கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இது பொடுகு போக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றிவிடும்
8. யோனி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஆரோக்கியமான யோனிக்கு தயிரில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியா பெரிதும் உதவுகிறது. இது யோனி pH அளவை சமன் செய்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ALSO READ | தினமும் உணவில் வெங்காயம்..... சர்க்கரை நோய் சரியாகும்..!!!
9. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
தயிரில் உள்ள எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தயிர் இதய நோய் அபாயத்தை குறைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை கலந்த தயிர் உணவை தவிர்ப்பது நல்லது.
10. இது ஒரு ஆற்றலை கொடுக்கும் உணவு
நீங்கள் சோர்வாக இருந்தால், உடனடியாக தயிர் எடுத்துக் கொள்ளவும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த, தயிர் ஒரு ஆற்றல் ஊக்கியாகும். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது கடின உழைப்பிற்கு பிறகு ஏற்படும் சோர்வை விரைவாக மீட்க உதவுகிறது.
இத்தனை பலன்கள் நிறைந்த தயிரை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.