திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பொங்காலை! லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு!

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

Last Updated : Feb 20, 2019, 01:45 PM IST
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பொங்காலை! லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு! title=

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

 

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்காலை திருவிழா உலக புகழ்பெற்றது. இன்று நடைபெற்ற இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபாடு செய்தனர்.

இந்த கோவிலில் பெண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை முக்கிய நிகழ்ச்சியான பொங் காலை திருவிழா நடந்தது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் முன்பு உள்ள பெரிய பண்டார அடுப்பில் முதலில் தீ மூட்டப்பட்டது. காலை 10.15 மணிக்கு கோவில் தந்திரி வாசுதேவன் நம்பூதிரி பண்டார அடுப்பில் தீ வைத்ததும் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த அடுப்பில் பெண் பக்தர்கள் தீ மூட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.

பொங்காலை திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Trending News