IRCTC வழங்கும் 'Alert' சேவை; இனி கன்பர்ம் டிக்கெட் பெறுவது மிக எளிது..!!!

IRCTC வழங்கும் புஷ் நோடிபிகேஷன் சேவை மூலம் பல தகவல்களைப் பெற முடியும். புதிய ரயில் சேவைகள், காலியிடங்கள் பற்றிய தகவல்கள் உங்கள் மொபைல்போனிலேயே கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 20, 2021, 02:39 PM IST
  • IRCTC வழங்கும் புஷ் நோடிபிகேஷன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
  • பயனர்கள் காலி பெர்த் குறித்த அல்ர்ட் செய்திகளை பெறலாம்
  • கன்பர்ம் டிக்கெட்டை பயணிகள் முன்பதிவு செய்வது எளிதாக இருக்கும்
IRCTC வழங்கும் 'Alert' சேவை; இனி கன்பர்ம் டிக்கெட் பெறுவது மிக எளிது..!!! title=

IRCTC வழங்கும் புதிய சேவை: ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட், அதாவது கன்பர்ம் டிக்கெட்டை பெற, வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சி செய்கிறோம். அப்படியும் கன்பர்ம் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், தட்கல் மற்றும் ஏஜெண்டுகள் என முயற்சி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் இப்போது நீங்கள் அப்படி அலைய வேண்டியதில்லை.  ரயிலில் பலர் டிக்கெட்டை அவ்வப்போது கேன்சல் செய்வார்கள். அதன் காரணமாக ஏதேனும் பெர்த் காலியாக இருந்தால், அதைப்பறி நீங்கள் உடனடியாக அறிந்து கொள்ளலாம். உடனடியாக அந்த டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். IRCTC வழங்கும் புதிய சேவையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ரயிலில் காலியாக உள்ள பெர்த் விபரங்களை அறிவது எப்படி?

ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்திற்கு சென்று ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ​​எல்லா ரயில்களிலும் இருக்கைகள் உள்ள நிலை குறித்து அறியலாம். ரயிலில் காலியிடங்கள் குறித்த  தகவல்களை வழங்கும் சேவையை தற்போது ஐ.ஆர்.சி.டி.சி வழங்கி வருகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி புஷ்  நோடிபிகேஷன் சேவையை அறிமுகப்படுத்தியது

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) புஷ் அறிவிப்புகளின் வசதியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் காலி இருக்கை  உட்பட பல வகையான வசதிகள் குறித்த தகவல்களைப் பெற முடியும். ஐ.ஆர்.சி.டி.சி சமீபத்தில் தனது வலைத்தளத்தை புதுப்பித்துள்ளது, இதில் பல புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுவாக உள்ள காலியிடங்கள், டிக்கெட் கான்சல் செய்வது மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் காலியிடங்கள், ஆகியவற்றின் தகவல்கள் பயனர்களின் மொபைலுக்கு அனுப்பப்படும். பயனர்கள் காலியாக இருக்கை இருப்பதை அவ்வப்போது அறிந்து கொள்ளும் போது,  தங்கள் வசதிக்கு ஏற்ப முன்பதிவு செய்யலாம். இந்த சேவையை பெற பயனர் முதலில் ஐ.ஆர்.சி.டி.சியின் வலைத்தளத்திற்குச் சென்று புஷ் நோடிபிகேஷன் பெறுவதற்கு பதிவு செய்ய வேண்டும்

ALSO READ | இனி டிக்கெட் இல்லாமலும் ரயிலில் பயணம் செய்யலாம்; பிளாட்பார்ம் டிக்கெட் போதும்

ஒரு குறிப்பிட்ட தேதிக்கு நீங்கள் ஒரு ரயிலில் ஒரு இருக்கை முன்பதிவு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் ரயிலில் எந்த இருக்கையும் இல்லை என்பதால், முன்பதிவு செய்யாமல் தவிர்த்திருக்காலாம். ஆனால், பின்னர் எவரேனும் டிக்கெட்டை கான்சல் செய்து காலியிடம் ஏற்பட்டால், அது குறித்த தகவல் உடனடியாக உங்களுக்கு அனுப்பும், புஷ் நோடிபிகேஷன் சேவையை IRCTC தொடக்கியுள்ளது. இந்த எஸ்எம்எஸ் தகவலில் காலியாகியுள்ள இடங்கள் விபரம், ரயில் எண் போன்ற தகவல்கள் இருக்கும். அதன் பிறகு நீங்கள் விரும்பினால், இந்த டிக்கெட்டை உடனடியாக முன்பதிவு செய்து   பயணம் செய்யலாம்.

நீங்கள் ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்திற்கு சென்றால், ​​புஷ்  நோடிபிகேஷன் ஆப்ஷன் இருக்கும். வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு சேவையை முற்றிலும் இலவசமாக பெறலாம். ஐ.ஆர்.சி.டி.சி தற்போது 3 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.

ALSO READ | IRCTC Booking Update: மோசடிகளை தடுக்க முக்கிய மாற்றம் விரைவில்.!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News