12YearsOfSamantha: சமந்தா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

நடிகை சமந்தா திரையுலகிற்கு வந்து இன்றோடு 12 ஆண்டுகள் ஆகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 26, 2022, 12:42 PM IST
  • சமந்தாவிற்கு பல மொழிகள் தெரிந்திருந்தாலும் தமிழ் தான் என் தாய் மொழி என்று கூறினார்.
  • 2010ம் ஆண்டு யே மாயா சேசவே படத்தில் நடித்தார்.
  • சமந்தாவை கனவுக்கன்னியாக இளைஞர்கள் கொண்டாடினர்.
12YearsOfSamantha: சமந்தா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! title=

சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தெலுங்கு பேசும் குடும்பத்தை சேர்ந்தவர் மற்றும் அவரது அம்மா ஒரு மலையாளி.   இருப்பினும் இவர்கள் சென்னையில் உள்ள பல்லாவரத்தில் வசித்து வந்தனர்.  சமந்தாவிற்கு ஜொனாதன் மற்றும் டேவிட் ஆகிய சகோதரர்களும் உண்டு.  சமந்தாவிற்கு பல மொழிகள் தெரிந்திருந்தாலும் தமிழ் தான் என் தாய் மொழி என்று கூறினார்.  சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்த சமந்தா, மாடலிங்கில் ஈடுபட்டார்.  

Image

மேலும் படிக்க | சமந்தாவின் அரபிக் குத்து வைரல் - பூஜா ஹெக்டேவின் ரியாக்ஷன்

2010ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்ட விண்ணை தாண்டி வருவாயா(தமிழ்) யே மாயா சேசவே (தெலுங்கு) படத்தில் நடித்தார்.  இதில் தமிழில் சிம்பு - திரிஷாவும் தெலுங்கில் நாகாசைதன்யா - சமந்தா நடித்து இருந்தனர்.  இந்த படம் சமந்தாவிற்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது.  இப்படம் சமந்தாவிற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும், நந்தி விருதையும் பெற்றுத் தந்தது. ஒரே ஆண்டில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு ஆகிய இரண்டையும் வென்ற இரண்டாவது நடிகை ஆனார் சமந்தா. 

samantha

பின்பு தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், ராமச்சரன், மகேஷ் பாபு என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.  2012ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படம் மீண்டும் சமந்தாவிற்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது.  மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் சமந்தா நடித்த நீதானே என் வசந்தம் படம் அவரை முன்னணி நடிகையாக கொண்டு சென்றது.  அதன்பின்பு தமிழில் கத்தி, பவன் கல்யாணுடன் அட்டாரிண்டிகி தாரேதி என தொடர்ந்து சமந்தா நடிக்கும் படங்கள் ஹிட் அடித்தன.  2013 ம் ஆண்டு ஜபர்தஸ்த் படத்தில் சமந்தாவும் நடிகர் சித்தார்த்ம் இணைந்து நடித்தனர்.  அதன் பின்னர் இருவரும் காதலித்து வந்தனர்.  அந்த சமயத்தில் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வந்தது.  பின்னர் இருவரும் பிரேக் அப் செய்தனர். பின்னர் 10 எண்றதுக்குள்ள, தங்க மகன்,தெறி, 24, மெர்சல் என தமிழ் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.  சமந்தாவை கனவுக்கன்னியாக இளைஞர்கள் கொண்டாடினர்.  அந்த சமயத்தில் நாகர்ஜுனா மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார் சமந்தா.  திருமணத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்தார்.  

sam

கடந்த ஆண்டு ஓடிடி-யில் வெளியான பேமிலி மேன் 2-யில் சமந்தாவின் கேரியரை வேறு தளத்திற்கு மாற்றியது.  இந்த சீரிஸின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார்.  இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக கடந்த அக்டோபர் மாதம் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.  இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  அதன் பின் சமந்தா ஆன்மிக சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார்.  சமீபத்தில் வெளியான புஸ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் சமந்தா.  இந்த பாடல் படத்தை விட அதிகம் பேசப்பட்டது. தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் தெலுங்கில் சாகுந்தலம் படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா.  

sam

திரை உலகிற்கு வந்து 12 வருடம் ஆனதை பற்றி, "இன்று நான் திரையுலகில் 12வது வருடத்தை நிறைவு செய்கிறேன். லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன் மற்றும் ஒப்பற்ற தருணங்களைச் சுற்றி வரும் 12 வருட நினைவுகள். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பயணம் மற்றும் உலகின் சிறந்த ரசிகர்களைப் பெற்றதற்காக நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன்!" என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க | ’இனி என்னுடைய சினிமா பயணம்...’ - சமந்தாவின் உருக்கமான மெசேஜ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News