2017-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் பந்தயத்தில் ஏ.ஆர். ரஹ்மான்!

Last Updated : Dec 14, 2016, 03:37 PM IST
2017-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் பந்தயத்தில் ஏ.ஆர். ரஹ்மான்! title=

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் பீலே என்பவரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘ஜிங்கா’ என்ற ஹாலிவுட் 

படத்துக்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாகி உள்ள நிலையில் 2017-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இந்த படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் இருவேறு பிரிவுகளின்கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

அதாவது படத்தின் பின்னணி இசை, பாடல்களுக்கான இசையமைப்பு ஆகிய இரண்டு பிரிவுகளில் இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2009-ம் ஆண்டு சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடலுக்கான இசை என்று ஒரே மேடையில் இரு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். ஸ்லம்டாக் மில்லியனைர் படத்துக்கு இசையமைத்ததற்காக ஆஸ்கர் விருதை வென்றார். மீண்டும் அவர் ஆஸ்கர் விருதை வெல்ல வாழ்த்துவோம்.

Trending News