1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து அன்றைய இளைஞிகளின் கவனத்தை ஈர்த்தவர் அப்பாஸ். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு திரையுலகின் சாக்லேட் பாயாக வலம் வந்த இவர், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
காதல் நாயகன் அப்பாஸ்:
விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கிய காலங்களில் இன்னொரு பக்கம் வளர்ந்து கொண்டிருந்த நடிகர், அப்பாஸ். அமெரிக்க மாப்பிள்ளை கதாப்பாத்திரத்திற்கென்றே அளவெடுத்த செய்தது போல, இவருக்கு அப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களே பெரும்பாலும் வழங்கப்பட்டன. காதல் தேசம் திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைய, அடுத்தடுத்து பல படங்களில் நாயகனாக கமிட் ஆனார். ஐஸ்வர்யா ராயின் காதலனாக 2000 ஆம் ஆண்டு வெளியான‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் நடித்து பலரின் கனவு காதலனாக மாறினார். ஆனால், 2010ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் நடித்த படங்கள் பல தோல்வியில் முடிந்தன. இதயடுத்து, அவர் 2015ஆம் ஆண்டிற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
மேலும் படிக்க | விவாகரத்து லிஸ்டில் இணைந்த 'சுப்ரமணியபுரம்' பட நாயகி..! காதல் கணவரை பிரிகிறாரா..?
வெளிநாட்டில் குடியேற்றம்:
அப்பாஸ் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் இவருக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதயடுத்து, இவர் நியூசிலாந்துக்கு குடியேறியுள்ளார். பெரும்பாலும் நேர்காணல்கல் அல்லது பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத அப்பாஸ், தற்போது ஒரு பிரபல ஊடகத்திற்க் பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனது திரைவாழ்க்கை குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நிறைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். படங்கள் தோல்வியுற்றதால் தனக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டதாகவும், வீட்டி வாடகை கூட கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அப்பாஸ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் பிறகு தனக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடத்ததாகவும் ஆனால் நடிப்பு போர் அடித்து விட்டதால் சினிமாவில் இருந்து விலகி நியூசிலாந்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு குடிபெயர்ந்த உடன் டாக்சி ஓட்டுவது, பைக் ரிப்பேர் செய்வது போன்ற வேலைகளையும் செய்ததாக அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.
‘நான் இறந்துவிட்டதாக நினைத்தனர்,,’
அப்பாஸ், தொடர்ந்து படங்களில் நடித்து விட்டு திடீரென்று சினிமாவை விட்டு விலகியதால் இவர் குறித்து பல தவறான தகவல்கள் அப்போது பகிரப்பட்டன. தான் மனநல மருத்துவமனைக்கு சென்றதாகவும், இறந்து விட்டதாகவும் கூட சில தகவல்கள் பரவியதாக அப்பாஸ் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதனாலேயே நேர்காணல்கள் கூட அதிகமாக கொடுப்பதில்லை என அவர் கூறியிருக்கிறார்.
தற்கொலை எண்ணம்:
சமூக வலைதளங்களில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருந்த அப்பாஸ், கொரோனா ஊரடங்கு சமயங்களில் மட்டும் வீடியோ கால் மூலமாக தன் ரசிகர்களிடம் பேசி வந்துள்ளார். அந்த நேரத்தில் தற்கொலை எண்ணத்துடன் போராடுபவர்களுக்கு உதவ நினைத்ததால் அவர் ரசிகர்களுடன் உரையாடியதாக தெரிவித்தார். இது குறித்த தனது சொந்த அனுபவம் பற்றி பேசிய அப்பாஸ், தான் 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் தனக்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தனக்கு தோன்றியதாக அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். தற்கொலை செய்து கொள்வதற்காக சாலையோரம் நின்று வேகமாக வரும் வாகனத்தின் முன்பு குதித்து தற்கொலை செய்ய நினைத்ததாகவும் ஆனால் அந்த வழியாக வந்த வாகனத்தை பார்த்த பிறகு தன்னால் அந்த நபரின் வாழ்க்கையும் வீணாகி விடுமே என்ற எண்ணம் தோன்றியதால் தன் முடிவிலிருந்து பின்வாங்கியதாக அப்பாஸ் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் கூட அடுத்தவரின் நலன் பற்றி தன்னால் யோசிக்க முடிந்தது எனவும் அவர் கூறியிருக்கிறார்.
அப்பாஸ் நடித்த படங்கள்:
அப்பாஸ், 1996ஆம் ஆண்டு அருண் என்ற கல்லூரி மாணவனாக காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். பூவேலி, படையப்பா போன்ற வெற்றிப்படங்களில் துணை கதாப்பாத்திரமாக வந்தார். சுயம்வரம், மலபார் போலீஸ், ஹே ராம், மின்னலே, கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் படங்கள் மூலம் வெவ்வேறு மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக மலையாள படம் ஒன்றில் நடித்த பிறகு திரையுலகை விட்டு விலகினார்.
மேலும் படிக்க | இந்த 5 தென்னிந்திய சூப்பர் ஹீரோ படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ