இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளயான திரைப்படம் Mr லோக்கல்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரம் ஏற்க சதீஷ், ரோபோ சங்கர், ஆர் ஜே பாலாஜி என பல காமெடி கதாப்பாத்திரங்களும் இடம்பெற்றிருந்தன.
எனவே இத்திரைப்படம் பெரும் காமெடி படமா வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு படன் வெளியாகவில்லை. இதன் காரணமாக படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
— ArunVijay (@arunvijayno1) May 17, 2019
Hi guys..
Its confirmed officially!
My next project announcement is going to be out next week..
The previous tweet was regarding this.
Please dont misinterpret
I am just focussing only on my work which I really love. Thank you..— ArunVijay (@arunvijayno1) May 17, 2019
இதற்கிடையில் இந்த திரைப்படம் வெளியான தினத்தன்று நடிகர் அருண் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்துல ஒரே ஒரு ஸ்மைலியோட ஒரு பதிவை இட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த அனைவரும் அருண் விஜய் மிஸ்டர் லோக்கல் படத்தை தான் கிண்டல் செய்துள்ளார் என தெரிவித்தனர்.
இதன் காரணமாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் இந்த பதிவை பார்த்துட்டு, அருண் விஜயை திருப்பி கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
ரசிகர்கள் பலரின் 3 மணி நேர கொந்தளிப்புக்கு பின்னர், இந்த பதிவுக்கான விளக்கத்தை மற்றொரு ட்வீட் வாயிலாக விளக்கியிருந்தார் அருண் விஜய். அதுபடி,"என்னோட அடுத்த படத்தோட அறிவிப்பு அடுத்த வாரம் வர இருக்கு, முந்தைய ட்வீட்டும் அது சமந்தப்பட்டதுதான், யாரும் தப்பா எடுத்துக்காதீங்க. நான் என் வேலையில் மட்டும்தான் கவனம் செலுத்தி இருப்பேன்" என குறிப்பிட்டு இருந்தார். எனினும் அருண் விஜயின் முந்தைய ட்விட்டை அடுத்து Mr லோக்கல் திரைப்படத்தின் மீதான விமர்சனங்கள் சற்று அதிகமாகவே வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.