‘தேனிக்கார நண்பா’ - பாரதிராஜாவுக்கு பரமக்குடியான் கமல் வாழ்த்து

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பாரதிராஜாவுக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 27, 2022, 02:41 PM IST
  • பாரதிராஜாவுக்கு சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு
  • திவீர சிகிச்சையில் இருந்தார்
  • தற்போது வீடு திரும்பியிருக்கிறார்
‘தேனிக்கார நண்பா’ - பாரதிராஜாவுக்கு பரமக்குடியான் கமல் வாழ்த்து title=

ஸ்டூடியோவுக்குள் முடங்கிக்கிடந்த தமிழ் சினிமாவை அவுட்டோருக்கு அழைத்து சென்றவர் இயக்குநர் பாரதிராஜா. கமல் ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினி உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் தமிழ் திரையை புரட்டி போட்டது. அந்தப் படம் வந்த பிறகுதான் பலருக்கும் இயக்குநராகலாம் என்ற நம்பிக்கையும், எண்ணமும் தோன்றியது. அதனையடுத்து பலரும் சினிமா ஆசையோடு தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வண்டி ஏறினர். பாரதிராஜா தொடர்ந்து இயக்கிய பல படங்களும் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை. அவரிடம் உதவி இயக்குநராக இருந்து இயக்குநரான பாக்யராஜ், மணிவண்ணன் போன்றோர் இன்றளவும் பலரால் கொண்டாடப்படுகின்றனர்.

இவர் கடைசியாக ஓம் (மீண்டும் ஒரு மரியாதை) என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு பிறகு எதுவும் இயக்காமல் இருக்கும் பாரதிராஜா பல படங்களில் நடித்துவருகிறார். அப்படி பாண்டியநாடு, திருச்சிற்றம்பலம், ராக்கி உள்ளிட்ட படங்களில் பாரதிராஜாவின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது.

Bharathi Raja, Kamal

இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஜூலை 17ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் மூலம் உடல்நலம் தேறிய அவர் சமீபத்தில் வீடு திரும்பினார்.

 

இந்நிலையில் பாரதிராஜா உடல்நலம் தேறி வீடு திரும்பியதற்கு கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நலம் பெற்று வீடு திரும்பிய  திரு. பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார். மருத்துவமனையில் நலம் விசாரிக்கச் சென்றபோது, ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை.. சீக்கிரம் வீடு திரும்புங்கள், நான் புறப்படுகிறேன் என்று சொன்னேன். 

 

Ok see you later for sure, Bye என்று ஆங்கிலத்தில் சொல்லி வழியனுப்பினார். சொன்ன வாக்கைக் காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்தப் பரமக்குடியானின் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவே இல்லை - விக்ரம் சோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News