சென்னை: பிரபல இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பாட்டா பரம்பரை திரைப்படம் கடந்த வெள்ளியன்று அமேசான் ப்ரைம்மில் வெளியானது. அட்டகத்தி, மெட்ராஸ்,கபாலி,காலா என அனைவராலும் பாராட்டப்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பா.ரஞ்சித். இந்தப் படம் வெளியானது முதலே ரசிகர்களிடடையும்,விமர்சன ரீதியாகவும் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பசுபதி, கலையரசன், சந்தோஷ், ஜான் விஜய்,சஞ்சனா, நடராஜன், துசாரா என பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக தேர்வு செய்யப்பட்டு இருந்தது, கதைக்கு பொருத்தமாக நடிகர்களின் நடிப்பும் இருந்தது.
குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக "சார்பட்டா பரம்பரை" அனைவரையும் கவர்ந்துள்ளது. அனைவராலும் பாராட்டப்படும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருக்கிறார்.
சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!! #SarpattaParambaraiOnPrime @beemji @arya_offl
— Suriya Sivakumar (@Suriya_offl) July 29, 2021
சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையை கண்முன் நிறுத்துகிறது. வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குநர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்று இயக்குநர் ரஞ்சித்தை பாராட்டியிருக்கிறார் நடிகர் சூர்யா.
அதுமட்டுமல்ல, திரைப்படத்தில் பணிபுரிந்த அனைத்து நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.
வடசென்னை எழுபதுகளில், குத்துச் சண்டைப் போட்டிகளுக்கு புகழ்பெற்று விளங்கியது.. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய உத்திகளும் உள்வாங்கப்பட்ட ‘ஆங்கில குத்துச் சண்டை’ப் போட்டிகள் நடக்கின்றன. அவற்றில் இரு பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் மோதிக் கொள்கின்றனர். சார்பட்டா - இடியாப்ப பரம்பரையினர் வெற்றி, தோல்விகளை, மானப் பிரச்சினையாகப் பார்க்கின்றனர்.
Also Read | Sarpatta Parambarai: இயக்குநர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை ட்ரெய்லர் வெளியீடு
ஒரு போட்டியில், இடியாப்ப பரம்பரை வீரர் வேம்புலியிடம், சார்பட்டா பரம்பரை வீரரான மீரான் ‘நாக் அவுட்’ ஆகிறார். அப்போது, சார்பட்டா பரம்பரையின் குருவான ரங்கன் வாத்தியாரை எதிர் அணியினர் சீண்ட, அவர் சவால் விடுகிறார். அவரை மானசீக குருவாக ஏற்ற கபிலன், குருவின் சவாலை நிறைவேற்ற களம் காண்கிறான்.
இந்த நிலையில் எதிர்பாராத அரசியல் திருப்பங்களால் கபிலன் பங்கேற்ற போட்டி தடைபடுகிறது. அதையடுத்து சார்பட்டா பரம்பரையினர் விட்ட சவால் என்னவானது என்பதை அருமையான கதைக்களத்தில் படமாக்கியுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித்.
திரைக்கதையின் போக்கை தீர்மானிக்கிறது அந்நாளைய அரசியல் சூழ்நிலை. அதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குத்துச் சண்டைபோட்டிகளில் பின்னிப் பிணைந்திருந்த திராவிடக் கட்சிகளின் அரசியல், மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பது அழகாக கையாளப்பட்டிருந்தது.
ALSO READ | Arya 30: வேற லெவல் தோற்றத்தில் ஆர்யா - வெளியானது பா.ரஞ்சித்தின் அடுத்த அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR