நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது ஐக்கிய அரபு அமீரகம்

அபுதாபியில் பொருளாதார மேம்பாட்டுத்துறை தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துறை தலைவர் முகம்மது அலி அல் ஷொரப் அல் ஹம்மாதி மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசாவை வழங்கினார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2021, 01:06 PM IST
நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது ஐக்கிய அரபு அமீரகம் title=

நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. கேரளத்தில் உள்ள திரைப்பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். 

அபுதாபியில் பொருளாதார மேம்பாட்டுத்துறை தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துறை தலைவர் முகம்மது அலி அல் ஷொரப அல் ஹம்மாதி மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசாவை (Golden Visa) வழங்கினார். சினிமா துறைக்கு இருவரும் அளித்த பங்களிப்பு மகத்தானது என அல் ஹம்மாதி கூறினார்.

மம்மூட்டியும் , மோகன்லாலும் (Mohanlal) கோல்டன் விசாவை வழங்கியதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி தெரிவித்தனர். தங்களை ஊக்குவித்து வளர்த்த கேரள மக்களுக்கு இந்த மரியாதை போய் சேரும் என்று நடிகர் மம்மூட்டி கூறினார். யுஏஇ அரசிடமிருந்து கோல்டன் விசாவினை பெற்றது மலையாள சினிமாவுக்கான அங்கீகாரம் என்று நடிகர் மோகன்லால் தெரிவித்தார். 

ALSO READ: தமிழக பெண் ஆயுர்வேத மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்த துபாய் அரசு

இவ்விழாவில் தொழிலதிபர் எம்.ஏ.யூசுப் அலியும் கலந்து கொண்டார். அபுதாபி (Abudhabi) பொருளாதார மேம்பாட்டுத் துறை செயலாளர் ரசித் அப்துல் கரீம் அல் பலுஷி மற்றும் அபுதாபி குடியிருப்பு அலுவலக ஆலோசகர் ஹரிப் முபாரக் அல் மாஹிரி ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

தொழிலதிபர்கள், திறன் படைத்த நபர்கள், பிரமுகர்கள், மற்றும் வணிகத் தலைவர்கள் ஆகியோருக்கு அவர்கள் துறைகளில் சிறந்து விளங்கியமைக்காக கோல்டன் விசாவானது வழங்கப்படுகிறது. மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசா வழங்கும் பணியை வெளிநாடு தொழிலதிபர் எம்.ஏ.யூசுபாலி செய்து முடித்துள்ளார். இந்த விசாவை பெறுவதற்காக இரண்டு நாட்களுக்கே இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றனர். 

இதற்கு முன்பு ஹிந்தி திரைத்துறையைச் சார்ந்த நடிகர் ஷாருக்கான் மற்றும் சஞ்சய் தத் (Sanjay Dutt)ஆகியோர் கோல்டன் விசாக்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவர் ஒருவருக்கு துபாய் அரசாங்கம் கோல்டன் விசா வழங்கியது.

மருத்துவரான நஸ்ரின் பேகம் திண்டிவனத்தில் பிறந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு திருச்சி சங்கரா ஆயுர்வேத கல்லூரியில் படித்து ஆயுர்வேத மருத்துவரானார். இதைத் தொடர்ந்து மருத்துவ பணிக்காக 2013 ஆம் ஆண்டு அவர் துபாய் சென்றார். 2017 ஆண்டு அவருக்கு மருத்துவ உரிமம் கிடைத்தது. 

ALSO READ: Golden Visa என்றால் என்ன? அது யாருக்கு கிடைக்கும்? பயன்கள் என்ன? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News