இதுவரை, உலக கிரிக்கெட் வரலாற்றில் பல வீரரக்ள் வந்து சென்றிருக்கின்றனர், பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கின்றனர். அதில் ஒரு சில வீரர்களை மட்டுமே கிரிக்கெட்டில் அவர்களது சாதனைகளை தாண்டி ஒரு மனிதனாக, ஒரு விளையாட்டி வீரராக மனதில் நிற்பர். அப்படி மனதில் நின்றவர்களுள் ஒருவர்தான் சவுரவ் கங்குலி. இவரை வங்கத்து புலி என்று சிலர் அழைப்பதுண்டு. தாதா என்றும் சிலர் அழைப்பதுண்டு.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக விளங்கியவர்களுள் ஒருவர், கங்குலி. இந்திய அணியின் ஆக்ரோஷமான வீரர் யார் என்று கேட்டால் அனைவரும் விராட் கோலியைத்தான் கைக்காட்டுவர். ஆனால், கோலிக்கு முன்பே அந்த இடத்தை பிடித்தவர், சவுரவ் கங்குலி.
கங்குலியின் வரலாறு:
கங்குலி 1972ஆம் ஆண்டு ஜுலை 8ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தில் பிறந்தார். கால்பந்து மீது நாட்டம் கொண்டு அதன் வழியே கிரிக்கெட் மீது காதல் கொண்ட வீரர் இவர். 2000 முதல் 2005ஆம் ஆண்டுவரை இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்திய கேப்டன் இவர். ஆண்டுகள் பல கடந்தாலும் மைதானத்தில் இவரது அசுரத்தனத்தை பார்த்த ரசிகர்கள் எத்தனை தோனி வந்தாலும் எத்தனை விராட் கோலி வந்தாலும் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?
ஹீரோ இவர்தானா..?
சவுரவ் கங்குலியின் வாழ்க்கை குறித்த திரைப்படம் தயாராக உள்ளது என சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதில் கங்குலியாக ‘இவர் நடிக்கிறார், அவர் நடிக்கிறார்..’ என பல நடிகர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டது. இறுதியில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் தற்போது பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.
ஆயுஷ்மான் குரானா:
இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ள பாலிவுட் பிரபலங்களுள் ஒருவர், ஆயுஷ்மான் குரானா. இவரது இந்தி படங்களான ஆர்டிகல் 15, பதாய் ஹோ, அந்தாதுன் உள்ளிட்ட படங்கள் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. இவர்தான் ‘தாதா’ சவுரவ் கங்குலியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆயுஷ்மான் குரானாவிற்கு இந்திய அளவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் அனைத்துமே தனித்துவம் மிக்கதாக இருக்கும் என்பதால், கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமும் கண்டிப்பாக நல்ல திரைக்கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இருவருக்கும் இத்தனை ஒற்றுமைகளா!
சவுரவ் கங்குலி போலவே, ஆயுஷ்மான் குரானாவும் இடது கையாலும் பேட்டிங் செய்வாராம். கங்குலியின் படத்தில் நடிக்க உள்ளதால் அவருடன் சில நாட்கள் தங்கி அவருடைய செய்கைகள் மற்றும் முக பாவனைகள் என அனைத்தையும் இவர் கற்றுக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இவருக்கு பிரத்யேகமான பயிற்சியாளர் ஒருவர் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
படப்பிடிப்பு ஆரம்பிப்பது எப்போது..?
கங்குலியின் வாழ்க்கை குறித்த படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் ஆரம்பிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அல்லது கொல்கத்தா பகுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. ஆயுஷ்மான் குரானாவின் நடிப்பில் கடைசியாக ட்ரீம் கேர்ள் 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை அளித்துள்ளனர்.
மேலும் படிக்க | தனுஷுடன் மீண்டும் இணையும் நித்யா மேனன்..! எந்த படத்தில் தெரியுமா..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ