நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. தமிழ், இந்தி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் விஜய்யின் முதல் பான் - இந்தியா ரிலீஸ் படம் எனும் சிறப்பையும் பெறவுள்ளது. இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளிலும் இப்படம் வெளியாக உள்ளது. பீஸ்ட் ரிலீஸ்க்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளதால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இதனிடையே பயங்கரவாதம் மற்றும் வன்முறையைத் தூண்டும் விதமான காட்சிகள் கொண்ட படங்களுக்கு எதிராக அரபு நாடுகள் கடுமை காட்டி வருவதால் கத்தார் மற்றும் குவைத் நாடுகளில் பீஸ்ட் படத்துக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தமிழகத்தில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ படத்துக்கு அரசு திடீர் தடை! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் எட்டு திரையரங்குகள் உள்ளன. இதில் கரூர் சினிமாஸ் உள்ளிட்ட 3 திரையரங்குகளில் விஜய் நடித்துள்ள `பீஸ்ட்' திரைப்படம் நாளை வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் தற்போது இத்திரைப்படம் மாநகர பகுதியில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படாது என திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே ஒப்பந்தம் அடிப்படையிலான ரேட் ஒத்துவரவில்லை என கூறப்படுகிறது. இதனால், வினியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இன்றுவரை ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. எனவே கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் `பீஸ்ட்' திரைப்படம் நாளை திரையிடப்படாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
இருந்த போதிலும் கரூர் மாவட்டத்தில் குளித்தலை லட்சுமி திரையரங்கம் மற்றும் அரவக்குறிச்சி மக்கள் திரையரங்கில் நாளை பீஸ்ட் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் உள்ள ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க | 'பீஸ்ட்' படத்தைத் தடை செய்க: முஸ்லிம் லீக் கோரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR