1) ட்ரெயின் டூ பூசன்: கொரியாவின் மிகவும் பிரபலமான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படங்களில் ஒன்று தான் இந்த 'ட்ரெயின் டு பூசன்'. இந்தப் படம் பூசானில் தனது தாயுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தனது மகளுடன் அதிவேக ரயிலில் செல்லும் ஒரு தொழிலதிபரின் கதையை காட்டுகிறது. ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் செல்லும் அதிவேக ரயில் ஜாம்பிஸ்களால் தாக்கப்படும் போது நிலைமை மாறிவிடுகிறது. இந்த கிளாசிக் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தை நீங்கள் அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்த்து கொள்ளலாம்.
2) ஸ்பேஸ் ஸ்வீப்பர்கள்: 'ஸ்பேஸ் ஸ்வீப்பர்ஸ்' என்பது 2092 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் எடுக்கப்பட்ட அறிவியல் புனைகதை ஆக்ஷன் திரைப்படமாகும். இது மாபெரும் வெற்றி பெற்ற முதல் கொரிய விண்வெளித் திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு. விண்வெளி குப்பைகளை சேகரித்து நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு வழங்கும் யூடிஎஸ் குழுவின் நான்கு உறுப்பினர்களை படத்தின் கதை சுற்றி வருகிறது. அந்த நபர்கள் அப்போது சிறிய மனித உருவத்தைக் கண்டுபிடிக்கின்றனர், அதன்பின்னர் அது ஒரு ஆபத்தான ஆயுதம் என்பதை அவர்கள் கண்டறிந்து அதனால் ஏற்படும் ஆபத்தான சூழ்நிலையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை படம் காட்டுகிறது. இப்படத்தை நெட்ஃப்ளிக்சில் பார்க்க்கலாம்.
மேலும் படிக்க | 2ஆவது திருமணம் செய்துகொண்ட ‘கில்லி’ நடிகர்- முன்னாள் மனைவி வெளியிட்ட பரபரப்பு பதிவு!
3) தி விட்ச் : பார்ட் 2. தி அதர் ஒன்: இது ஒரு அறிவியல் புனைகதை திகில் திரைப்படமாகும். குழந்தைகள் மீது மருத்துவர்கள் வினோதமான பரிசோதனைகள் செய்த அந்த மருத்துவமனையில் இருந்து தப்பித்த குறிப்பிடத்தக்க சக்தி கொண்ட தத்தெடுக்கப்பட்ட பெண்ணின் கதையை இப்படம் சொல்கிறது. அந்த சிறுமி வளர்ந்தவுடன், அவரது வாழ்க்கையில் சில விசித்திரமான நபர்களை சந்திக்கிறார், அதன் மூலம் அவர் வாழ்வில் சில குழப்பம் ஏற்படுகிறது. இந்த படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.
4) கால்: 'கால்' ஒரு காவிய த்ரில்லர் திரைப்படம் ஆகும், இது 2011 ஆம் ஆண்டு வெளியான பிரிட்டிஷ் மற்றும் போர்ட்டோ ரிக்கன் திரைப்படமான 'தி காலர்'-ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்திற்கு ஒரு நாள் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது, மறுமுனையில் உள்ள பெண்ணுடன் அவள் தொடர்பை ஏற்படுத்தி, கடந்த காலத்தில் சில நிகழ்வுகளை மாற்றும்படி அவளிடம் கேட்கும்போது, அவளுடைய நிகழ்காலம் கணிசமாக மாறுகிறது. கடந்த காலத்தில் அவர் செய்த தவறுகளைச் சரிசெய்வதற்கும், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான அவரது இலக்குகளை நிறைவேற்றுவதற்காகவும், வரலாற்றை மாற்றுவதற்கும் கதாநாயகி மேற்கொண்ட முயற்சிகளை இந்த திரைப்படம் ஆராய்கிறது. இப்படத்தை நெட்ஃப்ளிக்சில் பார்க்கலாம்.
5) அலைவ்: 'அலைவ்' என்பது கொரியன் மொழியில் வெளியான ஒரு ஜாம்பி த்ரில்லர் திரைப்படமாகும். சியோலில் உள்ள அபோகாலிப்ஸ் பகுதியில் ஒரு குடியிருப்பில் இருக்கும் கேமர் ஒருவர் ஜாம்பிகளுக்கு மத்தியில் உயிர்வாழப் போராடும் கதையை பற்றியது. வெளியுலகில் சூழ்ந்திருக்கும் ஜாம்பிகளுக்கு தெரியாமல் மறைந்து உயிர் வாழ்ந்து வரும் இவர், தனது அண்டை வீட்டார் ஜாம்பிகளுடன் தனியாக சண்டையிடுவதை காண்கிறார். அதன் பிறகு ஜாம்பிகளிடமிருந்து அந்த பெண்ணை காப்பாற்றி இருவரும் எப்படி ஜாம்பிகளிடமிருந்து தப்பிக்கிறார்கள், இறுதியில் உயிர் வாழ்ந்தார்களா இல்லையா என்பதை இப்படம் த்ரில்லிங் அனுபவத்துடன் காட்டுகிறது.
மேலும் படிக்க | Aditi Rao Hydari: மஞ்சள் மேகமாக மனதை மயக்கும் அழகு நாயகி அதிதி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ