கொரோனா குமார் படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களில் நடிக்க நடிகர் சிம்புக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கொரோனா குமார் படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய் முன்பணமாக கடந்த 2021ம் ஆண்டு அளிக்கப்பட்டதாகவும், பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டுமென கோரி வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிலம்பரசன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்பிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலம்பரசனுக்கு நான்கரை கோடி ரூபாய் கொடுத்ததாகவும் அதற்கான வரவு செலவு விவரங்களையும் தாக்கல் செய்தததோடு குறிப்பிட்ட தொகை ரொக்கமாக அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் படிக்க | ரக்ஷா பந்தன் ஸ்பெஷல்: சகோதர சகோதரி பாசத்தை அழகாக வெளிப்படுத்திய 5 தமிழ் படங்கள்..!
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஒப்பந்தத்தில் உள்ள படி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டெம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினத்திற்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்தவில்லை என்றால் மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி கூறினார்.
ரெட் கார்டு..
சில மாதங்களுக்கு முன்னர், தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு உள்பட 5 நடிகர்கள் மீது பரபரப்பு புகார் ஒன்று வைக்கப்பட்டது. விஷால், சிம்பு, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு படங்களில் நடித்து கொடுப்பதில்லை என்று கூறப்பட்டது. இதனால், சிம்பு உள்பட சம்பந்தபட்ட நடிகர்கள், உரிய விளக்கம் அளிக்கவில்லை எனில் அவர்களுக்கு ரெட் கார்டு காண்பிக்கப்படும் என்று கூறப்பட்டது. தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ரெட் கார்டு சிக்கலை தொடர்ந்து புதிய சிக்கலாக உருவாகியுள்ளது.
சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்..
நடிகர் சிம்பு கடைசியாக, ‘பத்து தல’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து, நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்னேஷனல் நிறுவனம் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படங்களுடன் சேர்த்து இவர், கொரோனா குமார் படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் சிம்பு கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ