துபாய் காமெடி பாணியில் வடிவேலுக்கு வாழ்த்துக்கள் சொன்ன சேரன்!

நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்! நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா என வடிவேலுக்கு  சேரன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2021, 07:12 PM IST
துபாய் காமெடி பாணியில் வடிவேலுக்கு வாழ்த்துக்கள் சொன்ன சேரன்! title=

வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்திருப்பதற்கும், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டும் இயக்குனர் சேரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு,வடிவேலு தமிழ் திரைப்பட நடிகரும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். 1991-ல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பு பெற்ற நகைச்சுவையாளர்கள், ஆனால் சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றால் யாராலும் மறுக்க இயலாது.ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைத்தவர் வைகைப்புயல் வடிவேலு.

வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் 'வைகைப்புயல்' என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.திரையுலகை விட்டு இரண்டு ஆண்டு காலம் விலகி இருந்த வடிவேலு,  தெனாலிராமன் என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கினார்.  தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.தற்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருகிறார் வடிவேலு. அதன்படி சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு, இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் வடிவேலுவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  அந்தவகையில் இயக்குனர் சேரன், நடிகர் வடிவேலுவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா.. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச்சந்துல இருந்து பேசுறேன்.. நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா.. காமெடில நீங்க எப்பவும் 'கிங்'..” என குறிப்பிட்டுள்ளார்.

 

ALSO READ ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருக்கும் விஜய்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News