Deepika Padukone: கர்ப்பத்தை அறிவித்த தீபிகா -ரன்வீர்.. குஷியில் ரசிகர்கள்

Actress Deepika Padukone Ranveer Singh Announce Pregnancy : பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடி ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் விரைவில் தாங்கள் பெற்றோராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 29, 2024, 11:35 AM IST
  • பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான காதல் ஜோடி.
  • கர்ப்பத்தை அறிவித்த தீபிகா -ரன்வீர் தம்பதி.
  • செப்டம்பர் மாதம் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர்.
Deepika Padukone: கர்ப்பத்தை அறிவித்த தீபிகா -ரன்வீர்.. குஷியில் ரசிகர்கள் title=

Actress Deepika Padukone Ranveer Singh Announce Pregnancy News in Tamil : பாலிவுட்டின் பிரபலமான நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக சற்று முன் அறிவித்துள்ளனர். இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காண்போம்.

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே (Deepika Padukone And Ranveer Singh) ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். தற்போது அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தீபிகா படுகோன் கடந்த 2006 ஆம் ஆண்டு கன்னடத்தில் நடிகையாக அறிமுகமான ஆனார். அதேசயம் இந்தி திரையுலகில் 2007 ஆம் ஆண்டு ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மறுபுறம் நடிகர் ரன்வீர் சிங் 2010 ஆம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

முன்னதாக நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்த தீபிகா படுகோனே, சில பிரச்சனைகளால் இவர்களது உறவு சில ஆண்டுகள் கழித்து முறிந்தது. இதனைத் தொடர்ந்து ராம் லீலா படத்தில் ரன்வீர் சிங்குடன் நடித்தபோது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இதன் பின்னர் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் இணைத்து பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், 83 ஆகிய படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

 மேலும் படிக்க | சத்தமின்றி முத்தம் தா: கதை இதுதான்.. பத்திரிகையாளர் சந்திப்பில் ஓபனாக பேசிய இயக்குநர்

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் கர்ப்பம்:
இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது, குறிப்பாக 77வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது வழங்கும் பாஃப்டா நிகழ்ச்சியில் தீபிகா படுகோனே அணிந்திருந்த சேலை விதம் கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்களிடத்தில் எழுப்ப நிலையில், தற்போது தீபிகா மற்றும் ரன்வீர் (Deepika Padukone, Ranveer Singh announce pregnancy) ஆகியோர் இன்ஸ்டாகிராமில், தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தனர். மேலும்,அவர்கள் தங்கள் குழந்தையை வரும் செப்டம்பர் 2024 ஆம் ஆண்டில் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் திரைப் பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் தீபிகா படுகோனே ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் சிறிய கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் 'சிங்கம் அகெய்ன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் மற்றும் கரீனா கபூர் ஆகியோருடன் தீபிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 மேலும் படிக்க | Rashmika Mandanna: ராஷ்மிகாவிற்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News