Tamilaga Vetri Kazhagam: கடந்தாண்டு பிப். 2ஆம் தேதி அன்று நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார். இக்கட்சியின் தேனி மாவட்ட மகளிரணியை சேர்ந்தவர் சத்யா. இவர் தேனி மாவட்டச் செயலாளர்கள் மீது தற்போது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது, தேனி மாவட்ட த.வெ.க நிர்வாகிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தொண்டர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. இதில் தேனி தெற்கு மாவட்ட செயலாளராக பாண்டி, தேனி வடக்கு மாவட்ட செயலாளராக பிரகாஷ் என்பவரும் தவெக தலைவர் விஜய்யால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வீடியோவில் பெண் கூறியது என்ன?
இந்நிலையில், தேனி மகளிர் அணியை சேர்ந்த சத்யா என்பவர் தற்போது வெளியிட்ட வீடியோவில் விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோதே இயக்கத்திற்காகவும் தற்போது கட்சியாக மாறிய பிறகும், அதாவது கடந்த ஏழு வருடங்களாக உழைத்து வரும் தனக்கு பொறுப்பு வழங்கக் கூடாது என்பதற்காக மாவட்ட செயலாளர்கள் தன் மீது குற்றம் சுமத்துவதாக அதில் புகார் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலையா? அண்ணாமலை ஆவேசம்!
இரண்டு மாவட்டச் செயலாளர்களும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களது உறவினர் பெண் மூலம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் தன் மீது நான்கு வழக்குகள் உள்ளதாகவும், தனக்கு மகளிர் அணி பொறுப்பாளர் வழங்கக் கூடாது எனவும் தவறான தகவல்களை கூறியதாக தெரிவித்தார்.
நான் நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு எவ்வித களங்கமும் ஏற்படுத்த இச்செய்தியை பதிவிடவில்லை, என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு தளபதி விஜய் அண்ணாவிடம் மட்டுமே நியாயம் கிடைக்கும் என இந்த கோரிக்கையை சமர்ப்பிக்கிறேன்..!@tvkvijayhq @actorvijay @AadhavArjuna @Ibrahim_0369… pic.twitter.com/84sVaYbSFU
— TVK Sathya Nanthakumar (@TVK_Sathya) February 3, 2025
நடவடிக்கை எடுப்பாரா விஜய்...?
தன் மீது உள்ள வழக்குகள் குறித்து தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டால் அதற்கு உரிய பதில் இல்லை, இது குறித்து தான் ஆனந்திடம் தன் மீது எந்த வழக்கும் இல்லை என்று ஆதாரத்துடன் தெரிவித்தும் இதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கட்சிக்காக இத்தனை வருடங்களாக தாங்கள் செய்த வேலையை அவமானப்படுத்துவது போல் இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
கட்சியின் மேல் இடத்தில் இருந்துதான் நன்றாக வேலை பார்த்து வருவதாகவும், தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததாலும் இதை பொறுக்காத தேனி மாவட்ட செயலாளர் என் மீது இதுபோன்று புகார் தெரிவிப்பதாக அந்த வீடியோவில் கூறினார். கட்சியின் சார்பில் அனைத்து நிர்வாகிகளின் பங்களிப்போடு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். ஆனால் தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி அவர் மட்டுமே வழங்கியது போல் கூறி வருவதாக தெரிவித்தார். த.வெ.க தலைவர் விஜய்க்கு இங்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து தெரிவதில்லை. எனவே இந்த விஷயம் அவருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | இந்தியாவில் முதல்முறை.. புற்றுநோய் மரபணு தரவுத் தளம் சென்னை ஐஐடி-யில் அறிமுகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ