எதற்கும் துணிந்தவன்: கிளிம்ஷா? டீசரா? ரசிகர்களின் ரியாக்ஷன்!

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டீசரை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:39 PM IST
  • எதற்கும் துணிந்தவன் டீசர் ரிலீஸ்
  • அரைமணி நேரத்தில் 5 லட்சம் பார்வைகள்
  • ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன?
எதற்கும் துணிந்தவன்: கிளிம்ஷா? டீசரா? ரசிகர்களின் ரியாக்ஷன்! title=

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. சூர்யா நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

மேலும் படிக்க | ஏ.ஆர், முருகதாஸ் தயாரிக்கும் புதிய படம்! ஹீரோ யார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, பிப்ரவரி 18 ஆம் தேதி டீசர் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை 6 மணிக்கு சன்பிக்சர்ஸ் நிறுவனம் டீசரை யூ டியூபில் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, ஹீரோயின் பிரியங்கா அருள்மோகன் உள்ளிட்டோர் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் லிங்கை ஷேர் செய்தனர்.

டீசர் வெளியிப்பட்ட அரைமணி நேரத்திற்குள் சுமார் 6 லட்சம் பார்வைகளைக் கடந்தது. குடும்பம் மற்றும் ஆக்ஷன் அடிப்படையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசருக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். குடும்பங்களோடு மக்கள் தியேட்டரில் பார்ப்பதற்கு ஏற்ற படம், பேம்லி எண்டர்டெயினராக எதற்கும் துணிந்தவன் இருக்கும் என ரசிகர்களின் ஒரு பகுதியினர் கூறும் நிலையில், மற்றொரு பிரிவினர் டீசர் வெளியிடுவதறாக கூறி கிளிம்ஸை வெளியிட்டு இருக்கிறீர்களே? என கிண்டலும் அடித்துள்ளனர்.

மேலும் படிக்க | சமந்தாவின் அரபிக் குத்து வைரல் - பூஜா ஹெக்டேவின் ரியாக்ஷன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News