அமரன் பாத்தாச்சா? அப்போ ‘இந்த’ 2 ராணுவ வீரர்களின் பயோபிக்கையும் பாருங்க!
Indian Army Officers Biopic Movies : அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து, வேறு 2 ராணுவ வீரர்களின் பயோபிக் படங்கள் குறித்தும் இங்கு பார்க்கலாம்.
Written by -
Yuvashree| Last Updated : Nov 3, 2024, 06:00 PM IST
Indian Army Officers Biopic Movies : தீபாவளியை முன்னிட்டு, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்த படம் குறித்தும், இதே போல ராணுவ வீரர்களின் பயோ-பிக் ஆக உருவாகியிருக்கும் இன்னும் இரண்டு படங்கள் குறித்தும் இங்கு பார்க்கலாம்.
அமரன் திரைப்படம்:
2014 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர், மேஜர் முகுந்த் வரதராஜன். மக்களைக் காப்பாற்ற உயிர் நீத்த இவரை நினைவு கூறும் வகையில் அமரன் படம் இவரது கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. முகுந்தாக மிக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார்.
முகுந்த் வரதராஜன் பிறந்ததிலிருந்து, ஆர்மி சேர்ந்தது முதல் இறக்கும் கடைசி தருவாய் வரை என்ன சொன்னார், என்ன செய்தார் என்பதை சினிமா பாணியில் கூறி இருக்கும் படம்தான் அமரன். இந்த படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. வசூலிலும், ரூ.100 கோடியை தாண்டியிருக்கிறது. இந்த படத்தை பார்த்தவர்கள், இதே போன்ற இந்திய ராணுவ வீரர்களின் பயோபிக்கையும் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த இரண்டு படங்களை இங்கு பார்ப்போம்.
மேஜர்:
2022ஆம் ஆண்டு வெளியான படம், மேஜர். இது, மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம், மேஜர். இந்த படத்தில், ஹீரோவாக ஆத்வி ஷேஷ் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படம் இது. இந்திய கமாண்டோ அதிகாரியான இவர், 2008ஆம் ஆண்டில் மும்பையில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர். இந்த திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
இந்த படத்தில், மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் பிறப்பு முதல், அவர் ராணுவத்தில் சேர்ந்து அதன் பிறகு செய்த சாதனைகள் வரை பல்வேறு விஷயங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. இப்படம், திரையரங்குகளில் வெளியான புதிதில், நல்ல வரவேற்பினை பெற்றது.
ராணுவ வீரர்களை பற்றி எடுக்கப்பட்டு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற படங்களுள் ஒன்று, ஷேர்ஷா. இது, விக்ரம் பத்ரா என்ற வீரமிகு ராணுவ வீரரின் கதையை கூறிய படமாகும். 1999ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் உயிரிழந்தவர், விக்ரம் பத்ரா. இவரது கதையை பேசிய படம்தான், ஷேர்ஷா.
இந்த படத்தில், விக்ரம் பத்ரா கதாப்பாத்திரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்திருந்தார். அவரது காதலியான டிம்பிளின் கதாப்பாத்திரத்தில், கியாரா அத்வானி நடித்திருந்தார். இப்படம், பலரது இதயங்களை உடைத்த படமாகும், இதனை, அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம். இது, இராணுவ வீரரின் காதல் கதையையும், அவருக்கு நாட்டின் மீதிருந்த பற்றையும் காண்பித்த படமாகும்.
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.