கர்ணன், ஜெய்பீம் ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர் நடிகை ரஜிஷா விஜயன். தற்போது கார்த்திக்கு ஜோடியாக ’சர்தார்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். அவர் 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடித்து சூப்பர்ஹிட்டான ‘ஜூன்’ திரைப்படம் தற்போது தமிழில் தயாராகி வருகிறது.
மலையாளத்தில் ஹிட்டான ’ஜோசப்’ படம் மூலம் புகழ்பெற்று தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்த ஜோஜு ஜார்ஜ் இந்தப்படத்தில் ரஜிஷா விஜயனின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஹமது கபீர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை நவீன் முத்துசாமி எழுதியுள்ளார். ஆன்ட் அண்ட் எலிபன்ட்ஸ் சினிமாஸ் (Ants to elephants cinemas) நிறுவனம் சார்பில் அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.
ALSO READ | RRR ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி: இயக்குனர் ராஜமௌளியை புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்
இந்நிலையில், இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி, இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன், வைபவ், எடிட்டர் பிரவீன் ஆகியோர் போஸ்டரை வெளியிடுகின்றனர். இது குறித்து படத்தின் அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் கூறும்போது, “மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான இந்தப்படம் நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும். பாடல்கள் அனைத்தும் அங்கே மிகப்பெரிய ஹிட். இங்கே தமிழில் பிரபல முன்னணி பாடகர்கள் இந்த பாடல்களை பாடியுள்ளனர். இந்த படம் இளைஞர்களை கவர்வது மட்டுமல்ல, குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய ஒரு ஃபீல் குட் படமாகவும் இருக்கும்.
குறிப்பாக, மலையாளத்தில் எப்படி நிவின்பாலிக்கு ஒரு பிரேமம் படம் அமைந்ததோ, அதேபோல ரஜிஷா விஜயனுக்கு இந்த படம் நிச்சயமாக அமையும்" என்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ALSO READ | ’வெந்து தணிந்தது காடு’ புத்தாண்டு பரிசாக அப்டேட் கொடுத்த கவுதம்மேனன்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR