1000 கோடி வசூல் சாதனை படைத்த கல்கி 2898 AD.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம் 1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 15, 2024, 04:07 PM IST
  • 1000 கோடி வசூல் சாதனை படைத்த கல்கி.
  • ரூ. 1000 கோடி கிளப்பில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.
  • வட அமெரிக்காவில் $17 மில்லியனைத் தாண்டியுள்ளது.
1000 கோடி வசூல் சாதனை படைத்த கல்கி 2898 AD.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ title=

Kalki 2898 AD Movie Box Office Collections: சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிகம் கவர்ந்த திரைப்படம் கல்கி 2898 ஏடி. இதில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் இந்த படத்தில் தீபிகா படுகோன், திஷா பதானி, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம், மகாபாரத கதையின் மறு உருவாக்கம் போல எடுக்கப்பட்டிருந்ததாக கருத்துகளும் வெளியானது.

கல்கி திரைப்படம்:
கல்கி 2898 ஏடி திரைப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியிருந்தார். நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு ஜாலியாக நடித்திருந்த படம் இது. இவருடன் படம் முழுவதும் கூடவே பயணிக்கும் ‘புஜ்ஜி’ என்ற காருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருந்தார். மேலும் இதில் சிறப்பு என்னவென்றால் இதில் பான் இந்திய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். புராணத்தில் கதையான மகாபாரத கதையை தழுவி, அதே போன்ற போர் டிஸ்டோப்பியன் காலக்கட்டத்தில் நடைபெறுவது போல எடுக்கப்பட்டிருந்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மக்களை வெகுவாக கவர்ந்திருந்தது. கிராஃபிக்ஸ் காட்சிகள், கதையமைப்பு, திரைக்கதை, வசனங்கள், இயக்கம், பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்தும் மக்களை பெரிதாக ஈர்த்திருக்கிறது. இப்படத்திற்கு சந்தாேஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1000 கோடி வசூல் சாதனை:
இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த கல்கி 2898 AD திரைப்படம், வெளியாகி மூன்றாவது வாரத்திலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் 1000 கோடி ரூபாய் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.

மேலும் படிக்க | அம்பானி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வாட்ச் கிப்ட்!

பாகுபலி 2க்குப் பிறகு பிரபாஸ், தற்போது ரூ. 1000 கோடி கிளப்பில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். கல்கி 2898 AD உண்மையில் தென்னிந்தியத் திரைப்படங்களில் பாகுபலி 2 படத்திற்குப் பிறகு, இந்த சாதனையை படைத்துள்ளது. இப்படம் தெலுங்கு மாநிலங்களில் இன்னும் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஹிந்தி திரையுலகிலும் மற்றும் பிற மொழிகளிலும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் $17 மில்லியனைத் தாண்டியுள்ளது மேலும் இந்த பிராந்தியத்தில் பாகுபலி 2 படத்திற்கு அடுத்து இந்த சாதனையைச் செய்துள்ளது. கல்கி 2898 AD யுகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் இன்னும் சில நாடுகளிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், ஒரு உலகத் தரத்தில், மிகச்சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன், மாயாஜால காட்சிகளும் முற்றிலும் புதிய களத்தில் வெளியான இப்படம் பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்தது. ஹீரோ பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் மற்ற குழு உறுப்பினர்கள் அனைவரையும் ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

ஓடிடியில் ரிலீஸ் எப்போது?
இத்னிடையே கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் பெற்று இருப்பதாகவும் மொத்தம், சுமார் ரூ.375 கோடி ரூபாய் இதற்கு விலையாக கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வரும் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | திருமணத்திற்கு பிறகு ஆனந்த அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ
 

Trending News