சாய் பல்லவி நடிக்கும் ‘கரு’ படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கரு’ படத்தின் ட்ரைலர் நாளை வெளியிடப்படும்.

Last Updated : Nov 17, 2017, 01:21 PM IST
சாய் பல்லவி நடிக்கும் ‘கரு’ படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு title=

ஏ.எல்.விஜய் இயக்கி சமீபத்தில் வெளியான படம் ‘வனமகன்’. இதனைத் தொடர்ந்து ‘கரு’ என்ற படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாக சௌரி மற்றும் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை ‘கிங் ஆஃப் டான்ஸ்’ பிரபு தேவா நாளை (18-ம் தேதி) மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.

 

 

ஏற்கனவே ‘கரு’படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ரை பிரபு தேவா வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News