சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் சீமான்! எந்த படத்தில் தெரியுமா?

Actor Sivakarthikeyan NTK Leader Seeman Movie : நடிகர் சிவகார்த்திகேயனுடன், நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 21, 2024, 12:33 PM IST
  • சிவகார்த்திகேயனுடன் இணையும் சீமான்?
  • அதுவும் இவர் படத்திலா?
  • வைரல் தகவல்!
சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் சீமான்! எந்த படத்தில் தெரியுமா?  title=

Actor Sivakarthikeyan NTK Leader Seeman Movie : தொகுப்பாளராக இருந்து நடிகராக  மாறிய சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் நடிகர்களிள் டாப்  நடிகராக வலம் வருகிறார். இவருக்கு தற்போது, பல்வேறு முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரியவும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது. 

சினிமாவில் அசுர வளர்ச்சி கொண்ட சிவகார்த்திகேயன்..

நடிகர் சிவகார்த்திகேயன், முதலில் தொகுப்பாளராகத்தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் மிமிக்கிரி கலைஞராக வந்து மக்களை மகிழ்விவத்த இவர், தொடர்ந்து ‘அது இது எது’ நிகழ்ச்சியில் தாெகுப்பாளராக மாறினார். இவரது திறமையை மக்கள் மட்டுமன்றி, திரை பிரபலங்களும் கூட பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில், அவருக்கு மெரினா திரைப்படம் மூலம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 

மெரினா படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் அடித்தன. இதையடுத்து, தொடர்ந்து ஏற்றம் கண்ட சிவகார்த்திகேயன் பல இயக்குநர்களுக்கு ஃபேவரட்டாக மாறினார். 

சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்கள்..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பிரின்ஸ் திரைப்படமும், இந்த ஆண்டு வெளியான அயலான் படமும் நல்ல விமர்சனத்தையோ வரவேற்பையோ பெறவில்லை. இடையில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் மட்டும் நல்ல விமர்சனங்களையும் பாக்ஸ் ஆபிஸில் கலக்ஷெனையும் பெற்றது. 

இவர், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு குழந்தை பிறந்தது! ஆணா பெண்ணா?

சீமானுடன் இணையும் சிவகார்த்திகேயன்?

பிரபல குணச்சித்திர நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைவராகவும் விளங்குபவர் சீமான். முழு நேர அரசியலில் ஈடுபட்டாலும் அவ்வப்பாேது படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது சிவகார்த்திகேயனின் ஒரு படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Sivakarthikeyan Seeman

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சீமானை அவரது வீட்டில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்துதான், இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

யார் படத்தில்..? 

கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாகவும் இதில்தான் சீமானும் இவரும் இணைந்து நடிப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | புதுமுக இயக்குநருடன் கைக்கோர்க்கும் சிவகார்த்திகேயன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News