இதுதான் நடிகர் விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’!! வீடியோ உள்ளே

மாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Last Updated : Feb 15, 2020, 01:19 PM IST
இதுதான் நடிகர் விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’!! வீடியோ உள்ளே title=

மாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

படத்தின் சிங்கிள் டிராக் நேற்று வெளியிடப்பட்டது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். இப்பாடலை கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

 

 

Trending News