"தமிழ்படம் 2.0"-வின் புதிய போஸ்டர்!!

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில், அமுதன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் "தமிழ் படம்". 

Last Updated : Dec 10, 2017, 03:46 PM IST
"தமிழ்படம் 2.0"-வின் புதிய போஸ்டர்!! title=

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில், அமுதன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் "தமிழ் படம்". 

தமிழ் திரைப்படங்களில் வழக்கமாக இடம்பெரும் காட்சிகளை சற்றே கிண்டால காண்பித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம். இப்படம் வெளியாகி திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இப்படத்தினை அறிமுக இயக்குனர் அமுதன் இயக்க, மிர்ச்சி சிவா, திஷா பாண்டே, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்திருந்தனர். 

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை ("தமிழ்படம் 2.0") இப்படக்குழுவினர் இயக்கவுள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த சஷிகாந்த் 2-ம் பாகத்தையும் தயாரிக்கிறார். 

சிவா மற்றும் ஐஸ்வர்யா மேனன் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். தற்போது இப்படம் அடுத்த ஆண்டு மே 25-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இன்று அப்படத்தின் ஹீரோ சிவா-வின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.

 

Trending News