அரியானாவை சேர்ந்த நடிகைக்கு ஆஸ்கர் விருதா? ஒரு நியாயம் தர்மம் வேணாமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்!

வடக்கு கலிபோர்னியாவில் பிறந்த இவர் ஆப்ரிக்க அமெரிக்கர். 2009-ம் ஆண்டு முதல் நடித்து வரும் அரியானா டிபோஸ் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 28, 2022, 02:51 PM IST
  • ஹாலிவுட் நடிகையின் பெயரை வைத்து பதிவு
  • பதிவிட்டவர்களை கலாய்த்த நெட்டிசன்கள்
  • அமெரிக்க நடிகையை அரியானா நடிகை என நினைத்து குழப்பம்
அரியானாவை சேர்ந்த நடிகைக்கு ஆஸ்கர் விருதா? ஒரு நியாயம் தர்மம் வேணாமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்! title=

நடிகை அரியானா டிபோஸ் வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றார். இந்நிலையில் இவரது பெயரை தவறாக புரிந்து கொண்ட சிலரின் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2022-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கியது. இதில் முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் டெனிஸ் வில்லெனுவ் இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற DUNE திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது. சிறந்த ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, விஷூவல் எபக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் DUNE திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியது. 

மேலும் படிக்க | பற்றி எரியும் Beast VS KGF-2: விஜய் குறித்து என்ன சொன்னார் யஷ்?!

'West Side Story' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை அரியான டிபோஸ் வென்றார். 'Coda' படத்தில் நடித்த ட்ராய் கோட்சருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பளருக்கான ஆஸ்கர் விருதை ஜென்னி பீவன் வென்றார். Cruella திரைப்படத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது. இதேபோல் சிறந்த அனிமேஷனுக்கான ஆஸ்கர் விருதை என்கான்டோ திரைப்படமும், சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை தி குயின் ஆஃப் பேஸ்கட்பால் திரைப்படமும் தட்டிச்சென்றன. 

 

இந்நிலையில் அரியானா டிபோஸ் பெயரை தவறாக புரிந்து கொண்ட சிலர், அவர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்திய பெண் ஒருவர் ஆஸ்கர் விருது வாங்கியதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த பதிவுகள் தற்போது வைரகாகி வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க, தவறாக பதிவிட்டவர்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ட்விட்டரில் ஒருவர் இது பாமக, பாஜகவுக்கு கிடைத்த வெற்றி எனக் கலாய்த்துள்ளார். அரியானா என்பது ஹாலிவுட் நடிகையின் பெயர். இவர் கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். 

மேலும் படிக்க | மனைவி Hair Style குறித்து கிண்டல் - ஆஸ்கர் மேடையிலேயே சக நடிகருக்கு பளார் விட்ட வில் ஸ்மித்!

twitter

வடக்கு கலிபோர்னியாவில் பிறந்த இவர் ஆப்ரிக்க அமெரிக்கர். 2009-ம் ஆண்டு முதல் நடித்து வரும் அரியானா டிபோஸ் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News