“எப்பவும் இதெல்லாம் வேணாம்” காதலருக்கு கண்டிஷன் போட்ட பிரியா பவானி சங்கர்! ரசிகர்கள் செம ஹேப்பி!

Priya Bhavani Shankar Conditions: சின்னத்திரையில் இருந்து திரைப்படங்களுக்கு வெற்றிகரமாக மாறிய பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது காதலன் ராஜவேலனுக்கு போட்ட கண்டிசன் பற்றி கேள்விப்பட்டு அவரது ரசிகர்கள் ஹேப்பியாக உள்ளனர்.

Written by - Ezhilarasi Palanikumar | Edited by - Shiva Murugesan | Last Updated : Jun 16, 2023, 05:12 PM IST
“எப்பவும் இதெல்லாம் வேணாம்” காதலருக்கு கண்டிஷன் போட்ட பிரியா பவானி சங்கர்! ரசிகர்கள் செம ஹேப்பி! title=

Priya Bhavani Shankar News: பிரியா பவானி சங்கர் தான் இப்போது பல இளைஞர்களின் தமிழக கிரஷ். பாதி திரிஷா, பாதி சிம்ரன் இவர் என பல இடங்களில் எஸ்.ஜே சூர்யாவே புகழ்ந்துள்ளார். அதோடு இப்போதெல்லாம் எந்த பட டிஸ்கஷன் என்றாலும், இவர் பெயர் தான் முதலில் அடிபடுகிறதாம். அப்படி டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் இவர், சொந்த வாழ்க்கை பற்றி பேசியது தான் இப்போது ட்ரெண்ட்டாகி வருகிறது. அப்படி என்ன தான் சொன்னார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கி பின்னர் சின்னத்திரை நடிகையாக உயர்ந்து. அதன் பின்னர் தற்போது பெரிய திரையில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் தனுஷ், சிம்பு, எஸ் ஜே சூர்யா, அருண் விஜய், அருள்நிதி போன்ற பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.

தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை ப்ரியா பவானி சங்கர் ராஜவேல் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பிரியா கடற்கரை ஓரமாக வீடு (Beach House) ஒன்றை வாங்கினார். அது பற்றி பதிவு ஒன்றை வெளியிட்ட அவர் 18 வருட கனவு. இனி மாலை நேரத்தில் கடலிலிருந்து  நிலவு வருவதை நாங்கள் பார்க்கப் போகிறோம். எங்களது புது வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளோம் என்று சொல்லி தன்னுடைய காதலரை முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

மேலும் படிக்க - கவர்ச்சி கடலில் தமன்னா..! இதோ இன்னொரு வெப்சீரிஸிலும் தாராளம்

தற்போது இவர் எஸ்.ஜே.சூர்யா இணைந்து பொம்மை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது வெளியாக இருக்கும் நிலையில், இதன் பிரமோஷன் நிகழ்ச்சியின் போது பிரியாவிடம் உங்களுக்கு பொம்மைகள் பிடிக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நான் பொம்மையை பக்கத்தில் வைத்து தூங்கும் நபர் இல்லை. நான் எனது 18 வயதில் இருந்தே காதலித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு மற்ற பெண்கள் போன்று டெடி பியர் எல்லாம் பிடிக்காது. அப்போதிலிருந்து இப்போது வரை எனது காதலரிடம்  டெடி பியர், பூக்கள் போன்றவை எனக்கு வேண்டாம் என்பதை ஸ்டிர்ட்டாக சொல்லி விடுவேன். அதற்கு பதிலாக எனக்கு பிடித்த சாப்பாடு வாங்கி கொடுங்கள் என்று கேட்பேன் என பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார். "இந்த ஐடியா ரொம்ப நல்லா நல்லா இருக்கே" என பிரியாவின் ரசிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

பிரியா பவானி சங்கரை பொருத்தவரை அவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்த வருகிறார். கமலின் இந்தியன் 2, விஷாலின் 34 ஆவது படம், டிமான்டி காலனி 2, அரண்மனை 4, இவை தவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - 36 வயதில் அடிக்கும் ஜாக்பாட்..! சமந்தா காட்டில் பணமழை..! பொறாமையில் முன்னணி நடிகைகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News