The Hunt For Veerappan: வீரப்பன் பிடிப்பட்டது எப்படி..? வெளியானது நெட்ஃபளிக்ஸ் டீசர்..!

The Hunt For Veerappan Teaser: சந்தனக்கடத்தல் வீரப்பன் பிடிப்பட்டது எப்படி என்பது குறித்து, நெட்ஃப்ளிக்ஸில் ஒரு புதிய டாக்குமெண்டரி வெளியாகவுள்ளது. அதன் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jul 27, 2023, 06:54 PM IST
  • தமிழகம் உள்பட மூன்று மாநிலங்களில் தேடப்பட்டவர், வீரப்பன்.
  • சந்தன கடத்தல் கடத்தினார்.
  • இவர் குறித்த டாக்குமெண்டரி வெளியாகியுள்ளது.
The Hunt For Veerappan: வீரப்பன் பிடிப்பட்டது எப்படி..? வெளியானது நெட்ஃபளிக்ஸ் டீசர்..! title=

சந்தன மரங்களை கடத்தி கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கும் மேலாக போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்தவர், வீரப்பன். இவரை பிடிக்க போலீஸார் பல தேடுதல் வேட்டைகளை நியமித்தும் எதுவும் பயணளிக்காமல் போனது. இது குறித்த ஒரு டாக்குமெண்டரியை நெட்ஃப்ளிக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். 

நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்டரி..!

பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு பல டாக்குமெண்டரிகள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் ஹாலிவுட் சினிமாக்களின் ஒரு அங்கமாக இருந்த இந்த டாக்குமெண்டரிக்கள் இப்போது இந்தியாவிலும் ட்ரெண்டாகி வருகின்றன. இதுவரை இந்திய நெட்ஃப்ளிக்ஸில் மட்டும் பல டாக்குமெண்டரிகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் புதிதாக இணைந்துள்ள படம்தான் “The Hunt For Veerappan”. இந்த படத்தில் வீரப்பனின் வாழ்க்கை வரலாறும் அவர் பிடிப்பட்ட கதையும் இதில் காண்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகிறது ‘போர் தொழில்’ படம்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?

The Hunt For Veerappan-டீசர்:

வீரப்பனின் வாழ்க்கை வரலாறு நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இன்று அப்படத்திற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அவன் மனித தோல் போத்திய மிருகம்..” என்பது போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அப்போதைய காவல் அதிகாரிகள் வீரப்பனை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அது மட்டுமன்றி வீரப்பன் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு முதுகில் துப்பாக்கி மாட்டிக்கொண்டு இருக்கும் காட்சியும் அதில் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த படம், பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

யார் இந்த வீரப்பன்..? 

இந்தியாவின் Robin Hood என்று அழைக்கப்படுபவர், வீரப்பன். சுமார் 36 வருடங்களாகசந்தன மரங்கள் கடத்துதல், யாணைகளை வேட்டையாடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வட்ன்ஹார். கிட்டத்தட்ட 184 பேரை கொன்றவர் இவர். அதில் பாதி பேர் காவல் துறையை சேர்ந்தவர்கள். மீதி பேர் வனத்துறை அதிகாரிகள். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என மூன்று மாநிலங்களிலும் சந்தன மரங்களை கடத்திய இவர் அம்மாநில காவல் துறையினரால் தேடப்பட்ட குற்றவாளி. இவரை உள்ளூர் பயங்கரவாதி என அறிவித்தது அரசாங்கம். 

பிடிப்பட்டது எப்படி..? 

வீரப்பனை பிடிக்க தமிழக காவல்துறையினரால் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டது. இதர்கு என்.கே செந்தாமரை கண்ணன், கே விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இறுதியில், காவல் அதிகாரிகளுக்கும் வீரப்பனின் கூட்டத்திற்கும் இடையே நடைப்பெற்ற சண்டையில் அவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். 

வீரப்பன் குறித்த படம்..

சந்தன கடத்தல் வீரப்பன் குறித்து தமிழில் முன்னதாகவே திரைப்படம் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு எதிர்ப்புகள் வலுத்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதற்கு முன்னர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் வீரப்பன் குறித்த தொடர் ஒன்று ஒளிபரப்பாகி வந்தது. இதுவும் சில காரணங்களால் தடைப்பட்டு பாேனது. தற்போது வீரப்பன் குறித்து வெளிவர உள்ள டாக்குமெண்டரி படத்திற்கு யார் அடுத்து போர் கொடி காண்பிக்க உள்ளனர் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க | ‘மாமன்னன்’ to ‘ரெஜினா’ இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News