பாலிவுட் நடிகை ஆதா ஷர்மா சமீபத்திய வெளியீடான தி கேரளா ஸ்டோரி மூலம் இந்தியா முழுவதும் புகழ் பெற்றார். திரையரங்குகளில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்திய இப்படம், பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் குவித்து வருகிறது. கேரளா ஸ்டோரி படம் மேற்கு வங்கத்தில் தடை செய்யப்பட்டிருந்தாலும், படம் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் பார்வையாளர்களை குவிய வைத்துள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, ஆதா ஷர்மா பல டிவி நிகழ்ச்சிகளிலும், யூடியூத் சேனல்களிலும் பேட்டிகளை வழங்கினார். யூடியூபர் பவானி மல்ஹோத்ராவுடனான ஒரு உரையாடலின் போது, ஆதா ஷர்மா தனது உண்மையான பெயர் சாமண்டேஸ்வரி ஐயர் என்பதை வெளிப்படுத்தினார், பின்னர் அவர் ஆதா ஷர்மா என மாற்றி கொண்டதாகவும் கூறினார்.
இவ்வளவு எளிமையான பெயர் எப்படி வந்தது என்று தொகுப்பாளர் ஆதா ஷர்மாவிடம் கேட்டபோது, நடிகை ஒரு சுவாரஸ்யமான செய்தியை வெளியிட்டார். “என் உண்மையான பெயர் சாமுண்டேஸ்வரி ஐயர்” என்றும், அவர் தனது உண்மையான பெயரை மாற்ற முடிவு செய்ததற்கான காரணத்தை மேற்கோள் காட்டி, தனது அசல் பெயரை உச்சரிப்பது மிகவும் கடினம் என்று பகிர்ந்து கொண்டார், இதனால் மக்கள் தனது பெயரைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. இது சாமுண்டேஸ்வரி என்ற தனது பெயரை ஆதா ஷர்மா என்று மாற்றத் தூண்டியது. 2008 ஆம் ஆண்டு வெளியான ஹாரர் த்ரில்லர் 1920ல் ரஜ்னீஷ் துக்கலுக்கு ஜோடியாக நடித்த பிறகு ஆதா ஷர்மா முதலில் முக்கியத்துவம் பெற்றார். பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்ற போதிலும், அவரது புகழ் மெதுவாக சரிந்தது. பின்னர், அவர் வித்யுத் ஜம்வாலின் கமாண்டோ ஃபிரான்சைஸ் போன்ற படங்களிலும், ஹாசி தோ ஃபேஸி மற்றும் செல்ஃபி போன்ற பாலிவுட் கேமியோ நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். ஆனால், தி கேரளா ஸ்டோரி கதைதான் திரையுலகில் அதாவின் காலடியை நிலைநிறுத்தியதாகத் தெரிகிறது.
சுதிப்தோ சென் இயக்கத்தில், கேரளா ஸ்டோரி, கல்லூரி செல்லும் சில பெண்கள் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டு இஸ்லாத்திற்கு மாறுகிறார்கள் என்பதை பற்றி பேசுகிறது. மதமாற்றத்திற்குப் பிறகு, சிறுமிகள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டு, பயங்கரவாதப் பணிகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆதா ஷர்மாவை தவிர தி கேரளா ஸ்டோரி படத்தில் யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனுபம் கெரின் தி காஷ்மீர் பைல்ஸின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் கேரளா ஸ்டோரி முறியடித்துள்ளது. சுதிப்தோ சென் இயக்கத்தில் மே 5 ஆம் தேதி வெளியான கேரளா ஸ்டோரி படம் 10 நாட்களில் 135 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தி கேரளா ஸ்டோரி படத்தை பற்றி ஆதா ஷர்மா பேசுகையில்,“எல்லோரும் படத்தைப் பார்க்க வேண்டும் என்பது எனது ஒரே கனவு, அது எனக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும்” என்றார்.
மேலும் படிக்க | தி கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு விபத்து!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ