சென்னை: இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் தல அஜித். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் இந்தத் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆணடிலேயே தொடங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை (Valimai) திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிய நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதனால் அஜித் ரசிகர்களின் தங்கள் தலயின் வலிமை திரைப்பட அப்டேட் வேண்டுமென வீதிவீதியாக கொடி பிடிக்கத் தொடங்கினர்.
இதையடுத்து, அஜித் பிறந்தநாளான கடந்த மே 1 ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று போனி கபூர்அறிவித்தார். ஆனால், கொரோனா பெருந்தொற்றால் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகாது என்றும் இன்னொரு நாள் வெளியிடப்படும் என ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ALSO READ | வலிமை திரைப்படம் குறித்த தரமான அப்டேட்!
அதன்பிறகு ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் என்று எழுதிய பதாகைகளை தூக்கிக்காட்டினர். அத்துடன், பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் அஸ்வினிடமும் வலிமை அப்டேட் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அஜித்தின் வலிமை திரைப்பட அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் தல ரசிகர்கள் #ValimaiFirstLook என்ற ஹாஷ்டேஹை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே திரைப்படத்திற்கான விருப்பத்தை ரசிகர்கள் BMS app என்ற செயலியில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இதில் திரைப்பட சீட்டுகளை பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருப்பது சினிமா வரலாற்றிலேயே முதன்முறை ஆகும். தற்போது அதையும் பதிவிட்டு அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Also Read | Viral Video: WTC பைனல்ஸில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR