மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆஃப்-ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் இனி ஃபுல் ஸ்விங்காக திரைப்படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹர்பஜன் சிங்கின் மனைவி பாலிவுட் நடிகை கீதா பாஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங், Friendship என்ற ரொமாண்டிக் மற்றும் காமெடி கலந்த தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Also Read | PUBG New State game பெறும் அபார வரவேற்பு, ஒரு வாரத்தில் 50 லட்சம் முன்பதிவு
தமிழில் தயாராகும் திரைப்படம் இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்படும். இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி சக்கைப்போடு போட்டுவருகிறது. இதனால் தான் ஹர்பஜன் சிங் முழு நேர நடிகராகிவிடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்னமும் ஹர்பஜன் சிங் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹர்பஜன் சிங்கின் திரைப்பட டீஸரை கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரய்னா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
This is epic Bhajju pa @harbhajan_singh. Can’t wait to watch the entire movie. Wishing you lots of success with this new endeavour.#FriendShipMovieTeaser
இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் தமிழகத்தில் பிரபலமானவர். இந்த திரைப்படத்தில் பஞ்சாபிலிருந்து வந்த கல்லூரி மாணவராக நடிக்கிறார் ஹர்பஜன். அது மட்டுமல்ல, ஒரு பிரபல மற்றும் முன்னணி கிரிக்கெட் வீரர் இந்திய திரைப்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது இதுவே முதல் முறை.
Also Read | ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு திருமணம் என்ற செய்தி வதந்தியா? உண்மையா?
பிக் பாஸ் தமிழ் 3 ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த இலங்கை செய்தி தொகுப்பாளர் லாஸ்லியா மரியனேசன், ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் கீதம் என்ற தலைப்பில் நடிகர் சிலம்பரசன் பாடிய இந்த படத்தின் முதல் தனிப்பாடல் 2020 ஜூலை 3 ஆம் தேதி ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு யூடியூபில் வெளியிடப்பட்டது. ரஜினிகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருந்தது.
ALSO READ: IPL 2021 இந்த நகரங்களில்தான் நடக்கும்: BCCI அறிவிப்பால் கடுப்பான அணிகள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR