உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன்(வயது-76), இன்று (மார்ச்-20) நள்ளிரவு 1.35 மணிக்கு சென்னை குளோபல் மருத்துவமனையில் காலமானார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவின் கணவர் நடராஜன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, 2017 அக்டோபரில் ஒரே நேரத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்த சிகிச்சை முடிந்து நவம்பரில் வீடு திரும்பினார்.
இந்நிலையில், மார்பு பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டதால் மார்ச் 16-ல், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவகள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், நடஜரானின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்துள்ளது. இந்நிலையில் இன்று (மார்ச் 20) நள்ளிரவு சரியாக 1.35 மணிக்கு நடராஜன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அஞ்சலிக்காக சென்னை பெசண்ட் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு வைகோ, பழ.நெடுமாறன், வைரமுத்து, நாஞ்சில் சம்பத் உள்ளிட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக சார்பில் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எவ வேலு, பொன்முடி, டிஆர் பாலு உள்ளிட்டோர் நடராஜனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளகளிடம் பேசிய ஸ்டாலின், ம.நடராஜனின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றார்.திராவிட இயக்கத்தின் மீது அளவுகடந்த பற்றுக்கொண்டவராக இருந்தவர் நடராஜன். மாணவர் பருவத்தில் தமிழ் மொழிக்காக நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர் பங்கேற்றவர் என புகழாரம் சூட்டினார்."
இதனையடுத்து ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி தினகரன் தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார். ஜெயா டிவி தலைமை நிர்வாக அதிகாரி விவேக் ஜெயராமனும் நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த ம.நடராஜன் உடலுக்கு வைகோ அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் இந்தி எதிர்ப்பு போராளி, எந்த பதவியில் இல்லாமலும் இந்திய தலைவர்களிடம் நட்போடு இருந்தவர் நடராஜன் என வைகோ புகழாராம் சூட்டியுள்ளார். ம.நடராஜனின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. மேலும் ஈழத்தமிழினப் படுகொலை எப்படி நடந்தது என்பதை தஞ்சையில் சிற்பமாக காட்டியவர் என்று வைகோ கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் கூறும்போது:- நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழ விடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு என்றார்.