Cholesterol Control Tips: நாம் உட்கொள்ளும் பலவித உணவு வகைகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பின் அளவும் அதிகமானால் இதய ஆரோக்கியம் உட்பட உடலின் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானால் உடல் பருமன், இதய கோளாறுகள், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல பிரச்சனைகள் நம்மை ஆட்கொள்ள கூடும். ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பதற்கான பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆப்பிள்: ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றன. இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகச்சிறந்த பழமாக பார்க்கப்படுகின்றது. வைட்டமின் ஏ, பி, சி, டி, கால்சியம், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்த இந்த பழத்தை தினமும் உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.
பருப்பு வகைகள்: பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, ராஜ்மா, காராமணி போன்ற பருப்பு வகைகளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. இது உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை கரைக்க உதவுகின்றது.
உலர் பழங்கள்: பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்களில் பல வித ஆரோக்கிய நன்மைகள்ம் உள்ளன. இவற்றை முறையாக உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை உடலை விட்டு நீக்க உதவும்
இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலாாகும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. இலவங்கப்பட்டை டீ குடிப்பது கொழுப்பை கரைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும்
ஓட்ஸ்: உடலில் கொல்ஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்கள் காலை உணவில் ஓட்ஸ் சாப்பிடலாம். ஓட்ஸில் பல வித ஆரோக்கிய நன்மைகள் இருப்பதோடு கெட்ட கொலஸ்ட்ராலை முழுவதுமாக அகற்றும் பண்புகளும் இதில் உள்ளன.
மஞ்சள்: மஞ்சள் உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பு செல்கள் எரிக்கப்படுகின்றன. மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கிறது. இதில் உள்ள குர்குமின் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றது
பூண்டு: பூண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகின்றது
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.