Fruits For Healthy Life: நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது. ஏனென்றால், நமது உடலில் 80% நீர் உள்ளது. அதே போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. காய்களை பொதுவாக சமைத்து தான் சாப்பிட வேண்டும். ஆனால், பழங்களை அப்படியே சாப்பிடலாம்.
பழங்களில் கொழுப்புச்சத்து அதிகம் இல்லை என்பதும், மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான் என்பதும் கனிகளை நாம் ஏன் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
பழங்கள் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாகும், அவை உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கின்றன. இயற்கையான உணவான பழங்களில் உடலை கெடுக்கும் உப்பு, கொழுப்பு மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரை இல்லை
வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து கொண்ட தக்காளி, இரத்த சோகை ஏற்படாஅமல் தடுக்கிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தக்காளியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். காயாகவும், பழமாகவும் உண்ணப்படுகிறது தக்காளி.
ஆரோக்கியமான எலும்புகள், திசுக்கள், நரம்புகள் மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவும் வைட்டமின்-சி, உடலில் போதுமான அளவு இருந்தால் நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும்
வளர்சிதை மாற்றச் செயல்களில் முக்கியப் பங்கு வகிக்கும் வைட்டமின்கள், உடலில் போதுமான அளவில் இல்லை என்றால், முக்கியமான வளர்சிதை மாற்றச் செயல்கள் நிகழாமல் போகின்றன. இதனால், உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது
செவ்வாழை, சிவந்த நிறமாக இருப்பதற்கு இதிலுள்ள வளமான கரோட்டின் காரணமாகும்.செவ்வாழையில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் நிறைந்து உள்ளது.
செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கும் மாதுளம்பழம் பெண்களுக்கு அருமருந்து என்றே சொல்லலாம். பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடித்தால் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்
ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் பழங்களாக இருந்தாலும், அவற்றில் வேறுபல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். அதுபோன்ற பழங்களை அளவுடன் சாப்பிடலாம்
எடை இழப்பு, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தோல் பராமரிப்புக்கு முழாம்பழம் அற்புதமானதாக இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ, சி, பி6 போன்றவையும் நிறைந்துள்ளது.