'X' பாலினத்துடன் கூடிய பாஸ்போர்ட்டை அமெரிக்கா புதன்கிழமையன்று அறிமுகம் செய்தது. சமூகத்தின் பைனரி அல்லாத உறுப்பினர்கள் முன்பை விட சுதந்திரமாக தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு முக்கிய முயற்சி இது.
புதிய பாலின விருப்பம் தொடர்பாக பேசியவெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், இந்த நடவடிக்கை அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை உறுதி செய்கிறது என்று கூறினார்.
Also Read | இந்தியாவின் அக்னி-5; சீனாவின் டிஎஃப்-17 ஏவுகணை! கேம் சேஞ்சர் எது?
"LGBTQI+ நபர்கள் உட்பட அனைத்து மக்களின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் முயற்சி இது. அதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறையின் முக்கிய முயற்சி இது. (புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)
அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, டென்மார்க், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, மால்டா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம்; சட்டப்பூர்வமாக்கப்பட்ட செயல்முறையின் மூலம் பாஸ்போர்ட்டில் மூன்றாம் பாலினத்தை தேர்ந்தெடுக்க ஏற்கனவே அனுமதித்துள்ளன
இந்தியா, அயர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, கொலம்பியா ஆகியவை மருத்துவச் சான்றிதழை வழங்குவதன் மூலம் மூன்றாம் பாலின அடையாளங்காட்டியைப் (third gender identifier) பயன்படுத்த அனுமதிக்கின்றன
2018 ஆம் ஆண்டில் பாலின-நடுநிலை பாஸ்போர்ட்டை வழங்கிய முதல் நாடு நெதர்லாந்து.
அடுத்த ஐந்தாண்டுகளில் பாஸ்போர்ட்டில் இருந்து பாலின அடையாளங்கள் நீக்கப்படும் என டச்சு அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த நடவடிக்கை பைனரி அல்லாத அல்லது டிரான்ஸ் நபர்களின் சிக்கல்களை குறைக்க வழிவகுக்கிறது