தொடர் தோல்வியில் பிரபாஸ்..! ப்ராஜெக்ட் கே படமாவது தோள் கொடுக்குமா..?

பிரபாஸ் நடித்துள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த படமாவது அவருக்கு கை கொடுக்குமா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

Project K First Glimpse: பிரபாஸ் நடித்துள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த படமாவது அவருக்கு கை கொடுக்குமா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

1 /8

நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம், ப்ராஜெக்ட் கே. இந்த படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நேற்று வெளியானது. 

2 /8

இந்த படத்திற்கு கல்கி 2898 ஏடி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

3 /8

இதில் நடிகர் பசுபதி முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். 

4 /8

தீபிகா படுகோனும் இந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தார். 

5 /8

இந்த படத்தில் பிரபாஸ் கல்கி அவதாரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

6 /8

கலியுக கடவுள் என போற்றப்படும் கல்கி, இருள் உலகை சூழும்போது அவதாரம் எடுப்பார் என கூறப்படுகிறது. அந்த கதாப்பாத்திரத்தில்தான் தற்போது பிரபாஸ் நடித்துள்ளார். 

7 /8

பிரபாஸ் இதற்கு முன்னர் நடித்த ஆதி புருஷ் படம் படு தோல்வி அடைந்தது. இதிலும் அவர் விஷ்ணுவின் 7ஆவது அவதாரமான ராமனாக நடித்திருந்தார். 

8 /8

இந்த படத்திலும் விஷ்ணுவின் அவதாரத்திலேயே நடித்துள்ளார். இதனால் படம் என்னாகுமோ என ரசிகர்கள் சற்று பீதியில் உள்ளனர்.