Peach Health Beanefits: உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் முக்கியமானவை. அதிலும், உடலின் ஆற்றலை அதிகரிக்ககூடிய சிறந்த பழங்களில் ஒன்றான பீச் பற்றிய இந்த ஊரறிந்த ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?
கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ள பீச் பழத்தில், பொட்டாசியம், இரும்பு, ஃபுளோரைடு போன்ற சத்துகள் அதிகளவு உள்ளது. புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளையும் கொண்ட பீச் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சூப்பர்ஃப்ருட்
பீச்சின் ஆரோக்கிய நன்மைகள் பீச் கலோரிகளில் குறைவாக உள்ளது (100 கிராம் பழத்தில் 39 கலோரிகள் மட்டுமே உள்ளது), மேலும் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லை. ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கலவைகள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்களால் நிரம்பியுள்ள பீச் பழம் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்டது. இவை, மனித உடலுக்குள் இணைப்பு திசுக்களை உருவாக்குவதற்குத் தேவைப்படுகிறது.
பீச் பழத்தில் வைட்டமின் பி6 கொண்டிருப்பதால் கர்ப்பிணிகள் பீச் பழங்களை அவசியம் உண்ண வேண்டும். மனஅழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீச் பழம், உடல் எடையையும் குறைக்கும்
நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கும் சக்திகளைக் கொண்ட பீச் பழம்,சீறு நீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது
நீர்சத்து அதிகம் கொண்ட பீட்டா கரோட்டின் இருப்பதால் உடல் வறட்சியை போக்குகிறது.
வறண்ட சருமம் உள்ளவர்கள், பீச் பழத்தின் ஒரு துண்டை வைத்து, முகத்தில் 20 நிமிடம் வரை தேய்த்து மசாஜ் செய்து, பத்து நிமிடத்திற்குப் பிறகு ஈரமான துணியால் துடைத்து விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவினால் சருமம் பொலிவு பெறும்
மாலைக்கண் நோய் போன்ற இரவு பார்வை பிரச்சினைகளைத் தடுப்பதற்கும் ஆரோக்கியமான சளி சவ்வுகள் மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதற்கும் வைட்டமின் ஏ அவசியம், இது பீச் பழத்தில் அதிகம் உள்ளது
பொட்டாசியம் என்பது செல் மற்றும் உடல் திரவங்களின் முக்கிய அங்கமாகும், இது இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. ஃவுளூரைடு என்பது எலும்புகள் மற்றும் பற்களின் ஒரு அங்கம் மற்றும் பல் சிதைவைத் தடுப்பதற்கு அவசியம். இரத்த சிவப்பணு உருவாவதற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இவை மூன்றும் பீச் பழத்தில் உள்ளத்