PCOS பெண்களை பாடாய் படுத்தும் உடல் பருமன்: நிவாரணம் காண இதை செய்தால் போதும்

Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் பெண்களை பாடாய் படுத்தும் பல பிரச்சனைகளில் பிசிஓஎஸ் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் இன்னும் பல நோய்களும் பெண்களின் உடலை பாதிக்கின்றன. 

பிசிஓஎஸ் உள்ள பெண்களிடம் எடை அதிகரிப்பு காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையின்மை. பிசிஓஎஸ் என்பது பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு நிலையாகும். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிக அளவில் மனநிலை மாற்றங்களும் ஆரோக்கியமற்ற உணவுகள் மீதான ஏக்கமும் இருக்கும். இதனால் பெண்கள் அதிகமாக சாப்பிடுகின்றனர். மேலும், இந்த காலகட்டத்தில், பெண்களுக்கு இன்சுலின் ஹார்மோன்கள் போதுமான அளவு உற்பத்தி ஆவதில்லை. இதன் காரணமாக, மற்ற ஹார்மோன்களின் சமநிலையும் பாதிக்கப்பட்டு, இன்சுலின் எதிர்ப்பு நிலை உருவாகிறது. 

1 /8

பிசிஓஎஸ் உள்ள பெண்கள் சில ஆரோக்கியமான உணவுகளைச் சேர்த்துக் கொண்டால், அது ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பிசிஓஎஸ் காரணமாக அதிகரித்த எடையைக் கட்டுப்படுத்தவும் (Weight Loss) உதவும். 

2 /8

சில ஆரோக்கியமான பானங்களை காலையில் குடித்து உங்கள் நாளைத் தொடங்குவது பிசிஓஎஸ் (PCOS) -ஐ குணப்படுத்துவதில் பெரும் உதவியாக இருக்கும். பிசிஓஎஸ் உள்ள பெண்களின் எடையைக் கட்டுப்படுத்த உதவும் 5 காலை பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /8

ஒரு பிடி கீரை, கோஸ், அரை வெள்ளரி, ஒரு பச்சை ஆப்பிள், ஒரு சிறிய துண்டு இஞ்சி மற்றும் தண்ணீர் ஆகியவற்றை அரைத்து அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடவும். இந்த ஸ்மூத்தியில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன. இது பிசிஓஎஸ் -ஐ நிர்வகிக்கவும் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.  

4 /8

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். வெந்தய விதைகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், பிசிஓடி உள்ள பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

5 /8

ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை வெந்நீரில் கலக்கவும். மேலும், சிறந்த உறிஞ்சுதலுக்கு ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்க்கவும். அதன் பிறகு இதை குடிக்கவும். மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், பிசிஓடி (PCOD) தொடர்பான வீக்கம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையை நிர்வகிக்க உதவும்.

6 /8

புதிய அல்லது உலர்ந்த புதினா இலைகளை 5-10 நிமிடங்கள் சூடான நீரில் ஊற வைக்கவும். அதை வடிகட்டி குடிக்கவும். புதினா தேநீர் ஆண்ட்ரோஜன் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆண்ட்ரோஜன் பிசிஓடி -ஐ அதிகரித்து நிலைமையை மோசமாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

7 /8

ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடியை வெந்நீரில் கலக்கவும். நன்றாக கலந்து குடிக்கவும். இலவங்கப்பட்டை இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவும், இது பிசிஓடி உடன் அடிக்கடி தொடர்புடைய இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துவதற்கு நன்மை பயக்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.