பப்பாளியை தினமும் உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் ஏ, மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பப்பாளியில் காணப்படுகின்றன.
உடல் ஆரோக்கியமாக இருக்க பப்பாளியை தினமும் காலையில் உட்கொள்வது, மிகவும் சிறந்தது. தினமும் சாப்பிட்டால், அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எண்ணில் அடங்காதவை. அதனைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உடல் பருமன்: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு, பப்பாளி சிறந்த தேர்வாக இருக்கும். பப்பாளியில் மிக குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது.
டீடாக்ஸ்: உடலின் கழிவுகளை அகற்றும் ஆற்றல் பப்பாளிக்கு உண்டு. இதனை தினமும் சாப்பிடுவதால், உடல் கழிவுகள் வெளியேறும். குடலை டீடாக்ஸ் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பப்பாளி உதவுகிறது.
இதய ஆரோக்கியம்: பப்பாளியில் நல்ல அளவு நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது கொலஸ்ட்ராலை எரித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கண் ஆரோக்கியம்: பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை கண்பார்வை கூர்மைக்கு உதவும். மேலும் கண்களை பாதிக்கும் நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
மலச்சிக்கல்: சிலருக்கு மலச்சிக்கல் என்பது தீராத பிரச்சனையாக இருக்கும். நாச்சத்து நிறைந்த பப்பாளியை தினமும் சாப்பிடுவதால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.
செரிமானம் ஆரோக்கியம்: பப்பாளியில் பப்பைன் என்ற என்சைம் உள்ள நிலையில் இது செரிமான அமைப்பை வலுப்படுத்தும். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை தினமும் சாப்பிட வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி: பப்பாளியில் ஏராளமான வைட்டமின் சி உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இது உதவுகிறது. பருவ கால நோய்களில் இருந்து காக்க, பப்பாளியை தினமும் சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோய்: பப்பாளியில் குறைந்த அளவு சர்க்கரை மற்றும் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே, கிளைசிமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க மிகவும் உதவும்.
கூந்தல் ஆரோக்கியம்: பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன கூந்தலை வலுவாகவும் பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியம்: பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.